ரணில், பிரதமராகவும் ஜனாதிபதியாகவும் இருந்த காலத்தில் அபகரிக்கப்பட்ட தமிழர்களின் நிலங்கள்…

ரணில், பிரதமராகவும் ஜனாதிபதியாகவும் இருந்த காலத்தில் அபகரிக்கப்பட்ட தமிழர்களின் நிலங்கள்...

கடந்த 15 ஆண்டுகளில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கே 6 ஆண்டுகள் பிரதமராகவும் ஜனாதிபதியாகவும் அதிகாரத்தில் இருந்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்கே அவர்களின் அதிகாரத்தின் கீழ் தான், நாவற்குழி சிங்கள குடியேற்றம் சட்டபூர்வமாக்கப்பட்டது.  வவுனியா வடக்கு கொக்கச்சான்குளம் (கலாபோகஸ்வெவ 1 & 2) நாமல்புர குடியேற்றங்கள் சட்டபூர்வ சிங்கள குடியேற்றங்களாக்கப்பட்டன. குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் மாலனூர் (12ஆம் கட்டை) மற்றும் ஏரமடு (10ஆம் கட்டை) பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்கள் உருவாக்கப்பட்டன.

திருகோணமலை சலப்பையாறு பகுதியில் 650 க்கும் மேற்பட்ட சிங்களக் குடும்பங்கள் குடியேற்றபட்டன. வவுனியாவில் மன்னார் மதவாச்சி வீதியை சூழ்ந்த பகுதிகளில் சிங்கள குடியேற்றங்கள் உருவாக்கப்பட்டன. மன்னார் முசலிப் பகுதியில் சிங்களக் குடியேற்றம் உருவாக்கப்பட்டது.

கொக்கடிவான் குளத்தின் சூழலிருந்த இருநூறு ஏக்கர் வயல் நிலம் 165 சிங்கள குடும்பங்களுக்கு பகிரப்பட்டது. ஒதியமலையை அண்டிய வவுனியாவின் எல்லைக் கிராமங்கள் பலவும் கஜபாகுபுர ஆக்கப்பட்டன.

குறிப்பாக சிலோன் தியேட்டர்,டொலர்ஸ் பாம், தனிக்கல், நாவலர் பண்ணை போன்ற பகுதிகளிலும் சிங்களக் குடியேற்றங்கள் செய்யப்பட்டன. முல்லைத்தீவின் எல்லையில் சிங்கபுர, 13 ஆம் கொலனி என பல சிங்களக் கிராமங்கள் உருவாக்கப்பட்டன.

கொக்குத்தொடுவாயில் மட்டும் 2,156 ஏக்கர் நிலம் சிங்கள மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. கொக்குதொடுவாய் பகுதியில் கோட்டக்கேணி அம்பட்டன் வாய்க்கால்,வெள்ளக்கல்லடி,தொட்ட கண்ட குளம் போன்ற இடங்களில் சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டனர். கோட்டைக்கேணி பிள்ளையார் கோவில் பகுதியில் 825 ஏக்கர் நிலம் சிங்கள மக்களுக்கு வழங்கப்பட்டது.

கொக்கிளாய் முகத்துவாரம் பகுதியில் 20 ஏக்கர் நிலம் சிங்கள குடியிருப்புக்காக வழங்கப்பட்டது. நாயாறு கொக்கிளாய் – முகத்துவாரம் பகுதிகளில் சுமார் 794 சிங்கள குடும்பங்கள் குடியேற்றப்பட்டன. கொக்கிளாய், கருநாட்டுக்கேணி பகுதியில் சிங்கள மீனவர்களுக்கு காணி உரிமம் வழங்கப்பட்டது ஆண்டான்குளம், திருக்கோணப்பட்டி, ஆத்தங்கடவை, மருதடிக்குளவெளி, ஆலடிக்குளம், சாமிப்பில கண்டல், ஈரக்கொழுந்தன் வெளி, படலைக்கல்லு, நித்தகைகுளம் போன்ற பகுதிகளில் சுமார் 647 ஏக்கர் நிலம் சிங்கள குடியேற்றங்களுக்காக வழங்கப்பட்டது.

கொக்குத்தொடுவாய்,புலிபாய்ந்தகல், நாயாறு, கொக்கிளாய் – முகத்துவாரம், சாலை ஆகிய 5 பல இடங்களில் பகுதிகளில் பருவகாலங்களில் தொழில் செய்ய தென்னிலங்கை மீனவர்கள் குடியேற்றப்பட்டனர். சூரியனாறு, முந்திரிகைக்குளம் பகுதிகளில் சிங்கள குடியேற்றவாசிகளுக்கு தமிழ் மக்களின் வயல் நிலங்கள் அபகரிகப்பட்டு வழங்கப்பட்டது.

மட்டக்களப்பு கெவிலியாமடு பகுதியில் சிங்கள மக்களுக்கான மாதிரி கிராமம் ஒன்று உருவாக்கப்பட்டு 20-25 சிங்கள குடும்பங்களுக்கு வீடுகளும் 60 இற்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு நிதி உதவிகளும் வழங்கப்பட்டன.

மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனை பகுதியில் மகாவலி அதிகார சபைக்குச் சொந்தமான காணியில் 13 சிங்கள விவசாயிகள் குடியேற்றப்பட்டுள்ளுனர் மேற்படி திட்டமிட்டட் குடியேற்றங்களுக்கு மேலாக, இக் காலப்பகுதிகளில் இலங்கை இராணுவம், தொல்லியல் திணைக்களம் , வன வள திணைக்களம் வனஜீவராசிகள் திணைக்களம் , மகாவலி அபிவிருத்தி சபை மற்றும் பிக்குகளால் மிக பல ஆயிரக்கணக்கான நிலங்கள், விவசாய காணிகள், மேய்ச்சல் தரைகள், நீர் நிலைகள் அபகரிக்கப்பட்டுள்ளன. இந்த ஆக்கிரமிப்புகள் எல்லாவற்றையும் மறைத்து விட்டு   ரணில் விக்கிரமசிங்க அவர்களை இப்போதும் சிலர் மீட்பராக சித்தரிக்கின்றார்கள்.

முகநூலில் இருந்து…