பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1,700 ரூபாய் நாளாந்த சம்பளத்தை வழங்குவதற்கான தீர்மானம் சம்பள நிர்ணய சபையில் இன்று திங்கட்கிழமை (12) நிறைவேற்றப்பட்டுள்ளது.
நாரஹேன்பிட்டியில் அமைந்துள்ள தொழில் செயலகத்தில் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை சுமார் 4 மணித்தியாலங்கள் இதற்கான பேச்சுவார்த்தை இடம்பெற்றது.
பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம், பெருந்தோட்ட தொழிற்சங்கங்கள் மற்றும் அரசாங்க தரப்பினரின் பங்களிப்புடன் தொழில் ஆணையாளரின் தலைமையில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது.



