உலக மக்களை அதிகம் பாதி த்துவரும் ரியூபகு ளோஸிஸ் எனப்படும் காச நோய்க்கான தடுப்பு மருந்து அடுத்த ஆண்டு மக்களின் பாவனைக்கு வரவுள்ளதாக ரஸ்யா வின் ஹமலியா ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அதன் தலைவர் அலக்சான்டர் ஜின்ஸ் பேர்க் கடந்த புதன் கிழமை(24) தெரிவித்துள்ளதா வது:
இந்த மருந்தின் பரிசோ தனை மூன்றாவது கட்ட பரிசோத னைகளில் வெற்றி பெற்றுள்ளது. மேலதிக பரிசோதனைகள் வெற்றி பெற்றால் இந்த தடுப்பு மருந்து எதிர்வரும் வருடத்தின் நடுப்பகுதி யில் பாவனைக்கு வரும்.
இதன் மூலம் எதிர்காலத்தில் இந்த நோயின் தொற்றை தடுக்க முடியும். தற்போது இந்த மருந்தை பரிசோதனை செய்த மக்களை நாம் அவதானித்து வருகின்றோம். வாழ்நாளில் ஒரு முறை செலுத்தும் முறையில் இந்த மருந்து தயாரிக் கப்பட்டுள்ளது.
இந்த மருந்தை நோய் தடுப்புக்காக மட்டு மன்றி நோயை குணப்படுத்தவும் பயன்படுத்த முடியும். இவ்வாறு இரட்டைப் பயன்பாடுள்ள மருந்துகள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.