ஈரானுக்கு எதிராக மத்திய கிழக்கில் நேட்டோ போன்ற படைத்துறைக் கூட்டணி ஒன்றை உருவாக்கவேண்டும் என இஸ் ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெத்தனியாகு கடந்த புதன் கிழமை(24) அமெரிக்காவின் காங்கிரஸ் சபையில் பேசும்போது தெரிவித்துள்ளார்.
சோவியத்தின் ஆபத்தை எதிர் கொள்வதற்கு அமெரிக்கா ஐரோப்பாவில் தனது பாதுகாப்பு கூட்ட ணியை அமைத்திருந்தது. அதே போல அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து பாதுகாப்புக் கூட்டணி ஒன்றை மத்திய கிழக்கில் அமைக்க வேண்டும். அதன் மூலம் ஈரானை முறியடிக்க முடியும்.
அவ்வாறான ஒரு கூட்டணி யின் செயற்பாட்டை கடந்த ஏப்பிரல் 14 ஆம் நாள் நாம் கண்டிருந்தோம். ஈரான் இஸ்ரேல் மீது தாக்குதல் மேற்கொண்டபோது இந்த நாடுகளின் கூட்டணி அதனை முறியடித்திருந்தது. கூட்டணி நாடுகளை ஒருங்கிணைத்து தாக்குதலை முறி யடித்ததற்கு நான் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.
இஸ்ரேலுக்கும் அரபு நாடுகளுக்கு மிடையில் அபிரகாம் உடன் பாட்டை முன் னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிறம் ஏற்படுத்தியிருந்தார். அதேபோல அபிரகாம் படைத்துறைக் கூட்டணியை நாம் அமைக்க வேண்டும்.நூம் அமெரிக்காவின் எதிரிகளுக்கு எதிராகவே போரிடுகின்றோம். எங்கள் எதிரி உங்கள் எதிரி எனவே எமது வெற்றி என்பது அமெரிக்காவின் வெற்றி என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சில காரணங்களை முன்வைத்து அமெரிக்க செனட் சபையின் 70 இற்கு மேற்பட்ட உறுப்பினர்கள் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள வில்லை. நெத்தனியாகுவின் வரவுக்கு எதிராக அமெரிக்காவில் பெருமளவான ஆர்ப்பாட்டங் கள் மேற்கொள்ளப்பட்டிருந்ததும் இங்கு குறிப் பிடத்தக்கது.