சிறிலங்காவின் 1983ம் ஆண்டு ஜூலை ஈழத் தமிழின அழிப்பின் நினைவேந்தலின் 41 வது ஆண்டு 23.07.2024இல் தொடங்குகின்ற நேரத்தில் அன்று முதல் இன்று வரை சிறிலங்காவின் ஈழத்தமிழின இனஅழிப்பு இனத்துடைப்பு பண்பாட்டு இனஅழிப்பு நோக்குகளிலோ அல்லது இந்த இனஅழிப்பின் தலைமை நோக் கான ஈழத்தமிழர்களின் பொருளாதார வாழ்வை அழித்து அவர்களின் இறைமையை ஒடுக்கி அவர்களின் நிலத்தைக் கடலை அபகரித்துச் சிங்கள மயமாக்கல் என்பதிலோ எந்த சிறுமாற்றம் கூட இல்லாதுள்ளது.
அதே நேரத்தில் இந்த 41 ஆண்டுகளிலும் இந்த ஈழத்தமிழின அழிப்புக்கான அனைத்துலக சட்டங்களின் அடிப்படையிலான தண்டனை நீதியோ பரிகார நீதியோ இதுவரை கிடைக்காத நிலையும் தொடர்கிறது.
இந்நிலையில் இந்த 1983 ஆடியின அழிப்பின் வரலாறு வளர்ச்சி என்பவற்றைச் சுருக்க மாக மீட்டுருவாக்கம் செய்து இதற்கான அனைத்துலக சட்டங்களின் அடிப்படையிலான தண்டனை நீதியை அல்லது பரிகார நீதியை எவ்வாறு நடைமுறைச் சாத்தியமாக்கலாம் எனச் சிந்திப்பதே இக்கட்டுரையின் நோக்குகால் நூற்றாண்டாகத் திட்டமிட்டு வளர்க்கப்பட்ட 1983க்கான இனஅழிப்பு அரசியல்
இற்றைக்கு 80 ஆண்டுகளுக்கு முன், 1944ம் ஆண்டு மே மாதத்தில் இலங்கை சட்டசபையில் ஜே. ஆர். ஜயவர்த்தனா சிங்களத்தை ஆட்சி மொழியாக்கும் சட்ட மூலத்தை முன்மொழிந்தார். இதற்கு வி. நல்லையா அவர்கள் கொண்டு வந்த திருத்தத்தில் தமிழும் சிங்களமும் இலங்கையின் ஆட்சி மொழி யாக அமைய வேண்டும் எனக் கோரினார். இதனை ஜே. ஆர் ஜயவர்த்தான ஏற்றக் கொள்ள அதற்கு எஸ். டபிள்யூ. ஆர் டி பண்டாரநாயக்கா தானும் அதனை ஏற்பதாகத் தெரிவித்தார். நல்லையா அவர்களின் திருத்தம் 27க்கு 2 என்ற வாக்குகளால் நிறைவேறியது.
பண்டாரநாயக்காவால் 1945இல் ஜே. ஆர் ஜயவர்த்தானவைத் தலைமையாகக் கொண்ட ஆணைக்குழுவொன்று ஆங்கிலத்தில் இருந்து சிங்களத்திலும் தமிழிலும் ஆட்சியினை முன்னெடுப்பது தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்டது. 1946 இல் இந்த ஆணைக்குழு சிங்களத்திலும் தமிழிலும் ஆட்சி இடம்பெற வேண்டுமென்ற அறிக்கையை வெளியிட்டது. பிரித்தானிய காலனித்துவ ஆட்சியைப் பண்பாட்டு மீட்டுணர்வு மூலம் எதிர்க்கின்ற தேவை இருந்ததினால் 1930 முதல் 1948 வரை சிங்களமும் தமிழும் ஆட்சி மொழிகள் என்ற கருத்தியல் காலனித்துவத்தில் இருந்து விடுதலைக்காக மக்களை ஒருமைப்படுத்தி ஒருங்கிணைப்பதற்குத் தேவையான அரசியல் உத்தியாக இருந்தது.
தொடர்ந்து 1954இல் உயர்கல்விக்கான ஆணைக்குழு முன்னாள் நீதியரசர் ஆர்தர் விஜேவர்த் தனா தலைமையில் ஐக்கிய தேசியக்கட்சி அரசாங் கத்தில் நியமிக்கப்பட்ட பொழுது அதில் தமிழ் மாணவர்களுக்கு அதிக இடம் உயர்கல்வியில் அளிக்கப்படுகிறது என்ற புள்ளி விபரங்களுடான அறிக்கை பௌத்த சிங்களத் தீவிரவாதச் செயற்பாட்டாளரான எல் எச். மெத்தானந்தாவால் முன்வைக்கப்பட்டுச் சிங்களவர்களுடைய வளர்ச்
சிக்கு இது தடையாக உள்ளதென்ற கருத்து எடுத்துரைக்கப்பட்டது. அத்துடன் சிங்கள தமிழ் இரு மொழி ஆட்சிமொழிக் கொள்கையும் தவறாதென்ற கருத்தும் தொடக்கப்பட்டது. ஆயினும் அன்றை கவர்னராக இருந்த ஒலிவர் குணதிலகா இருமொழி ஆட்சி மொழி அரச கொள்கை எனவும் அதனை உரியமுறையிலேயே கேள்விக்குள்ளாக் கலாமெனவும் அறிவித்தார். இதனை அடுத்து சிங்களம் மட்டும் ஆட்சி மொழியாக வேண்டும். தரப்படுத்தல் வழி தமிழர்களின் உயர்கல்வி அனுமதி குறைக்கப்பட வேண்டும் என்ற சிந்தனை கள் சிங்கள பௌத்தத்தின் வளர்ச்சிக்கான முன் நிபந்தனைகளாகச் சிங்கள அரசியலில் முதன்மை பெற்றன.
1911 ம் ஆண்டு முதல் வீறு பெற்று வந்த சிங்கள பௌத்த பேரினவாத உணர்வு 1956 தேர்த லில் பண்டாரநாயக்காவின் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தேர்தல் கொள்கை விளக்கத் திரட்டில் சிங்களம் மட்டுமே ஆட்சி மொழி தமிழுக்கு நியாயமான பயன்பாடு என்று இடம் பெற்றாலும் தேர்தல் மேடைகளில் நியாயமான தமிழ்மொழிப் பயன்பாடு பற்றியே பேசப்படாது தேர்தலில் வெற்றி பெற்றால் 24 மணி நேரத்தில் சிங்களம் மட்டும் சட்டம் கொண்டு வரப்படும் எனச் சிங் கள பௌத்த பேரினவாதத்தினைத் தூண்டும் அரசியல் சுலோகமாகப் பேசப்பட்டது.
இதனால் வெற்றி பெற்ற பண்டாரநாயக்காவின் சிறிலங்காச் சுதந்திரக் கட்சி உடன் டபிள்யூ தகநாயக்காவைத் தலைவராகக் கொண்ட சிங்கள மொழி முன்னணி, சிங்களத் தொழிற்சங்கத் தலைவரான பிலிப் குணவர்த்தானவின் கட்சியான புரட்சிகர லங்கா சமசமாஜக்கட்சி இணைந்து ஐக்கிய மக்கள் முன்னணிக் கூட்டாட்சி உருவாகியது. இதில் சிங்கள எழுத்தாளராக இணைந்தவர் தான் ஐ. எம். ஆர் ஏ ஈரியக்கொல்லை 12000 பிக்குகளைக் கொண்ட பிக்குகள் ஒற்றுமை முன்னணியும் பண்டாரநாயக்காவின் 24 மணி நேரச் சிங்கள மட்டும் சட்டத்துக்கு பேராதரவு வழங்கினர்.
1956 இல் புத்தரின் 2500 வது பிறந்த நானை முன்னிட்டு 1954இல் பிக்குகள் சங்கத்தால் வெளியிடப்பட்ட “ புத்தத்துக்கு இழைக்கப்பட்ட துரோகம்” நூல் பௌத்த சிங்கள மக்களிடை மதவெறி மொழிவெறி இனவெறி பாய்ச்சும் தன்மையானதாக அமைந்தது. இந்தச் சூழலில்தான் 05.06.1956 இல் சிங்கள சட்டம் பாராளுமன்றத்தில் சட்டமாக்கப்பட்டு ஈழத்தமிழரின் அடிப்படை மனித உரிமைகளான மொழியுரிமை தொழிலுரிமை என்பவற்றுக்கான சட்டப்பாதுகாப்பை இல்லா தாக்கியது. அதே வேளையில் இதனை எதிர்த்து பாராளுமன்றத்துக்கு முன்பாக கால்பேஸ் கடற்
கரையில் தமிழ்த் தலைவர்கள் செய்த சத்தியாக் கிரகத்தை ஆயுதபடைபலத்தால் தாக்கி சத்தியாக்கி ரகப் போராட்டத்தை தமிழரின் இரத்தம் பெருகவைத்த போராட்டமாக மாற்றியதும் அல்லாமல் தமிழரின் உயிர் உடல் நாளாந்த வாழ்வுக்கான பாதுகாப்பு இனி இல்லையென்பதை வெளிப்படுத்தி இனங்காணக் கூடிய அச்சத்தை தமிழர்க்கு வாழ்வாக்கும் வகையில் அரச ஆதரவு டன் கல்லோயாக் குடியேற்றத்திட்டத்தில் ஆயுத மயப்படுத்தப்பட்ட சிங்களக் குடியேற்றக்காரர் மூலமாக சட்டப்பாதுகாப்பை பொலிசார் வழங் காத நிலையில் 150 தமிழரை அவர்களுடைய வரலாற்றுத் தாயகத்திலேயே இனப்படுகொலை செய்யச் செய்து இனவழிப்பு சிங்கள அரசியலும் ஆயுதமுனையில் தமிழர் நில அபகரிப்பும் தொடங்கப்பட்டது.
இதன் வளர்ச்சியாகவே 1957இல் எல்லா வாகனங்களிலும் இலக்கத் தகடு சிங்கள சிறியுடன் அமைய வேண்டுமென்ற சட்டம் கொண்டு வரப்பட்டது. அதற்கு எதிர்வினையாகத் தமிழ் சிறி யுடன் தமிழர்கள் 1958 ஜனவரி 1ம் திகதி முதல் தாங்கள் வாகனம் ஓடியதை எதிர்த்து சிங்களப் பகுதிகளில் இருந்த தமிழ்ப் பெயர்ப்பலகைகளை எல்லாம் பிக்குகள் தலைமையில் கறுப்புத்தார் பூசி அழித்து அதன் தொடர்ச்சியாக 25.05.1958 இல் தமிழரசுக்கட்சியின் வவுனியா மாநாட்டில் இருந்து மட்டக்களப்புக்குத் தமிழ்ப்பயணிகள் பயணித்த புகையிரதத்தைப் பொல்லநறுவையிவ் வைத்து திட்டமிட்ட முறையில் சிங்களவர்கள் கவிழ்த்து தமிழர்களைத் தாக்கிச் சொத்துக்களைக் கொள்ளையடித்து 1958 ஈழத்தமிழின அழிப்பைத் தொடங்கினர்.
களுவாஞ்சிக்குடியில் அன்றையத் தினம் தனிப்பட்ட முரண்பாட்டில் களுவாஞ்சிக்குடியில் கொல்லப்பட்ட நுவரெலியாவின் முன்னாள் மேயர் சேனரத்னாவின் மரணத்தைத் தமிழர்கள் சிங்களவர்களைக் கொல்கின்றார்கள் எனப் பல முறை சிங்கள வானலைகளில் செய்தியாக்கி தமிழர் தாயகத்துக்கு வெளியே வாழ்ந்த தமிழர்களைக் குறிப்பாகக் கொழும்பில் வாழ்ந்தவர்களை நூற்றுக்கணக்கில் கொன்றழித்தனர். கடைகள் வீடுகளை எரித்தனர். பாணந்துறை கந்தசுவாமி சைவஆயலக் குருக்களைக் கொழுத்தி எரித்தனர். கதிர்காமத்தில் இருந்த தமிழ் அடியார்களைக் குத்திக் கொன்றனர். கர்ப்பிணித் தமிழ்ப்பெண்களை வயிற்றைக் கிழித்துக் கொன்றனர். இவ்வாறாக 1956 ஐ விட ஒழுங்கமைக் கப்பட்ட ஈழத்தமிழின அழிப்பாக 1958 ஈழத் தமிழின அழிப்பைச் சிங்கள அரசாங்கம் முன்னெடுத்தது. இதன் பின்னர் 1970 முதல் அரசியல் விழிப்புணர்ச்சியுற்ற ஈழத்தமிழர்களை அவர்களது தாயகத்திலேயே காரணமின்றிக் கைது செய்து விசாரணையின்றிச் சிறையில் காலவரையின்றி அடைத்தல் பொலிசாரை இராணுவமாகப் பயன் படுத்திக் கைதுசெய்து கொன்று பொதுவிடங்களில் எறிந்து மக்களை அச்சப்படுத்தல் போன்ற சட்டவிரோத மனிதாயமற்ற செயல்களைச் சுதந்திரக் கட்சி இடதுசாரி கூட்டணி ஆட்சி செய்தது. உதாரணமாக இன்பம் என்னும் யாழ்ப்பாண இளைஞரும் அவரின் மைத்துனரும் இவ்வாறு இரவு பொலிசாரால் கைதாக்கப்பட்டு காலை யில் மண்டைத் தீவுச் சந்தியில் வெட்டி எறியப்பட்டமை யாழ் குடாநாடு முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தியது.
1977 தேர்தலுக்குப் பின்னரும் கொழும்பிலும் மலையத்திலும் தமிழ் இன அழிப்புத் தாக்கதல்கள் தொடர்ந்தன. 1974இல் யாழ்ப் பாணத்தில் நடைபெற்ற 4வது உலகத் தமிழராய்ச்சி மாநாட்டில் 11 பேரை இனஅழிப்புச் செய்து மக்கள் மேல் தாக்குதல்களை நடாத்திப் பண்பாட்டு இனஅழிப்பை தொடங்கிய சிறிலங்கா 1981 மே மாதம் 31 இல் ஆசியாவின் இரண்டாவது பெரிய 96000 நூல்களுடன் இருந்த யாழ் நூலகத்தையும் யாழ்ப்பாணப் பாராளுமன்ற உறுப்பி னர் வெற்றிவேலு யோகேஸ்வரனின் வீட்டை யும் யாழ்ப்பாண நகரின் கடைகளையும் எரித்து ஈழத்தமிழரின் பண்பாட்டுத் தலை நகர மெனப்பட்ட யாழ்ப்பாணத்துள்ளேயே ஈழத்தமிழ் மக்கள் மேலான தாக்குதல்களை ஆரம்பித்த னர். இவற்றின் தொடர்ச்சியாகவே 1958ம் ஆண்டின் ஈழத்தமிழின அழிப்பின் வெள்ளி விழாவாக 1983 ஜூலை ஈழத்தமிழின அழிப்பை 23 முதல் 30 வரைநடாத்தி உலகில் தமிழர்கள் அரசியல் புகலிடம் கோரி வாழும் அளவுக்கு ஈழத்தமிழர்களை அவர்களின் வீடுகளில் இருந்து வெளியேற்றும் இனங்காணக் கூடிய அச்சத்தை அவர்களின் வாழ்வாக்கினர்.
அனைத்துலகப் பார்வையில் 1983 ஜூலை ஈழத்தமிழின அழிப்பு திட்டமிட்ட இனப்படுகொலைஅனைத்துலக ஜூரிகள் ஆணையகத்தின் போல் செய்கர்ட் (Paul Seigart) அவர்கள் 1983 ஜூலை மாதத்தில் நடந்தவற்றை குறித்த விசாரணை அறிக்கையை Sri Lanka Mounting tragedy of errors என்னும் தலைப்பில் வெளியிட்ட பொழுது “இந்தத் தாக்குதல்கள் சிங்களவர்களிடை திடீரென ஏற்பட்ட உணர்ச்சிக் கொந்தளிப்பால் ஏற்பட்ட வொன்றல்ல. அவ்வாறே இந்தத் தாக்குதல்கள் தொடங்கப் பெறுவதற்கு முதல்நாள் 13 சிங்கள இராணுவத்தினர் தமிழீழ விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்ட செய்தி ஊடகங்களில் வெளி வருமுன்பே அதற்குத் துலங்கலாக இந்தத் தாக்கு தல்கள் அமைந்தன என்பதும் உண்மைக்குப் புறம்பானது. இது ஏற்கனவே முன் கூட்டியே திட்டமிடப்பட்டு அமைக்கப்பட்டவொன்று” என்று அறிவித்து “இந்தச் சாட்சியங்கள் வழி இந்தச் சிங்களவர்களின் வன்முறைகள் தமிழர்கள் மேலான இனஅழிப்பு நடவடிக்கை என்ற முடிவுவை எடுக்க வைக்கின்றது “ என உலகுக்கு அனைத்துலக சட்டங்களுக்கு எதிரான தமிழின அழிப்பு எனத் தீர்ப்பாக அறிவித்தது.
04.08. 1983ம் ஆண்டு இலண்டன் டைம்ஸ் “சிறிலங்கா இராணுவம் கொலைகளையும் தமிழர் வீடுகளையும் வர்த்தக நிலையங்களையும் கொள்ளையடிப்பதையும் எந்தவித பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாது ஊக்கப்படுத்தியதுமல்லாமல் இவற்றில் தானும் பங்கேற்றும் உள்ளது” என உலகுக்கு ஊடகப் பொறுப்புணர்வுடன் தெளிவாக வெளிப் படுத்தியது. இலண்டனின் ஆங்கில நாளிதழான ‘த கார்டியனில்’ பிரித்தானியப் பாராளுமன்ற உறுப் பினர்கள் 53 பேரின் கையொப்பத்துடன் 1983ம் ஜூலை ஈழத்தமிழின அழிப்புக்கான அனைத்துலக நீதியை வேண்டி அறிக்கை வெளியிடப்பட்டது.
மூவாயிரத்துக்கு மேற்பட்ட தமிழர்களை இனப்படுகொலை செய்து, இனமதமொழி வெறித் தன்மையால் தமிழர்களை உயிருடன் எரித்தும் சிறுவர்களையும் ஈவிரக்கமின்றி பயங்கரமான முறைகளில் கொன்றழித்து, வைத்தியசாலைகளில் இருந்த தமிழ் நோயாளிகளைக் கூடத் தேடிச்சென்று கொன்று மிருகத்தனமான செயல்களால் கொன் றனர். இச்செயல்களால் 1983 ஜூலையில் சிங்கள வர்கள் தமிழர்களை இனஅழிப்பு செய்தனர். என்பது வெளிப்படையாகவே உலகுக்கு உறுதிப் படுத்தப்பட்டது.
இத்தாக்குதல்களில் தமிழர்களை யாழ்ப்பாணத்துச் சித்தர் யோகர் சுவாமிகள் சோமசுந் தரப்புலவருக்கு “கொல்வார்கள் எரிப்பார்கள்” என்று ஏற்கனவே முன்னறிவிப்புச் செய்தது போலத் தமிழர்களை நிர்வாணப்படுத்திக் கேலி செய்து அவமானப்படுத்தினார்கள். தமிழ்ப் பெண்களைச் சிறுமிகளைக் கூடப் பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கினார்கள். தமிழர்கள் நீண்டகாலத்தில் மனநோயாளிகளாக உடல் வலுவிழந்தவர்களாக வாழ வைக்கப்பட வேண்டும் என்ற அடிப்படை நோக்குடன் பயங்கரமான சித்திரவதை முறை மைகளை கையாண்டார்கள்.
1983 ஜூலை 23 முதல் 30 வரையான ஈழத்தமிழின அழிப்புக்கு முன்னரே ஈழத்தமிழர் வரலாற்றில் காந்தியக் கொள்கையுடன் ஆதரவு தேடிய மக்களுக்கு டொலர் பண்ணை, கென்ட் பண்ணை என இரு விவசாயப் பண்ணைகளை தமிழரின் விளைச்சல் தரையான வன்னி மாவட் டத்தில் அமைத்து இல்லிடமும் உணவும் ஆடையும் கொடுத்து அவர்கள் மண்ணில் விவசாயம் செய்து பாதுகாப்பான சூழலில் வளர்ச்சிகளுடன் வாழ உதவியமைக்காகச் சிறிலங்காவின் அமைச்சரின் ஆணையில் கைதாக்கப்பட்டுச் சிறிலங்கா சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களில் 63 வயதினராக தலைசிறந்த கட்டிட நிர்மாண வரைபடக் கலைஞராக இலங்கையிலும் வெளிநாடுகளிலும் வேலைசெய்து அனுபவமிக்க டேவிட் ஜயாவை பனாகொடை இராணுவ முகாமைச்சார்ந்நதவர்கள் ஆண் பெண் பள்ளிமாணவர்களின் முன்பாக நிறுத்தி ஆடைகளைக் களைந்து அவமானப் படுத்தினார்கள்.
இவர்களுக்கு உணவை நாய்போல நாலுகாலில் தவழ்ந்து போய் எடுங்கள் உங்கள் இனத்தவர் நாய்கள் எனக் கூறி தன்மானத்தை இழக்க வைத்தனர். முழங்காலில் நடந்து திரியுங்கள் உங்கள் இனத்தவர் குற்றவாளிகள் ஆதலால் முழங்காலில் நிற்க வேண்டியவர் என்று சித்திரவைதைப்படுத்தினர். வெறும் தரைகளி லேயே படுக்க வைத்து கைகால்களைக் கட்டிப் போட்டுக் குப்புறமாகவே வாகனங்களில் தூக்கி வீசி பயணங்களை அந்த நிலையில் செய்ய வைத்தனர். இறுதியாக வெலிகடைச் சிறையில் டாக்டர் ராஜசுந்தரம் அவர்களை துடிக்கத் துடிக்க அடித்துக் கொண்டனர். இத்தனைக்கும் இவர்கள் இருவரும் காந்திய வழியில் வாழ்வுக்கு ஏங்கிய மக்களுக்கு இல்லிடமும் உணவும் உடையும் வேலை வாய்ப்பும் அளித்தது அல்லால் வேறு எந்தக் குற்றமும் செய்ததில்லை. இந்த இரு வரது வரலாறே உலகின் கண்களில் காந்திய அடிப்படையில் செயற்பட்டவர்கள் கூட இனஅழிப் புக்குள்ளானமைக்குச் சான்றாகவுள்ளது.
தமிழர்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டன. இனமாகக் கூடி வாழ்தல் இன்று வரை சிறிலங்கா அரசினால் திட்டமிடப்பட்ட முறையில் சிதைக்கப்பட்டு வருகிறது. 1983 யூலை இனஅழிப்பில் 18000 வீடுகள் 5000 தமிழர் வர்த்தக அமைப்புக்கள் முற்றாகவோ பகுதியாகவோ அழிக்கப்பட்டுத் தமிழர்களின் நாளாந்த வாழ் வாதாரங்கள் சிதைக்கப்பட்டன.
சிறில் மத்தியூ என்கிற ஐக்கிய தேசியக்கட்சியின் அமைச்சரும் இன்றைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவினது நண்பரும், இவரது உறவினரும் அரசியல் குருவுமான முன்னாள் சிறிலங்கா ஜனாதிபதியும் போர் என்றால் போர் என இலங்கைத் தீவினதும் உலகினதும் மூத்த குடிகளான ஈழத்தமிழர்கள் மேல் “மக்கள் மேலான யுத்தத்தைப் பிரகடனப்படுத்தி அதனை இனஅழிப்பாகவே செய்வதற்காக 1979 இலேயே அரசியல் விழிப்புணர்வுற்ற ஈழத் தமிழர்களைக் கண்ட இடத்தில் சுடவும் சுட்ட இடத்தில் எரிக்கவும் அனுமதிக்கும் பயங்கரவாத தடைச்சட்டத்தை நடைமுறைப்படுத்தி யாழ்ப்பாணத்துக்குத் தனது மருமகனும் படைத்தளபதியு மான கெக்டர் கொப்பேகடுவவை அரசியல் விழிப்புணர்வுள்ள இளையோரை டிசம்பர் மாதத்துள் கொன்றழிக்கும்படி உத்தரவு வழங்கியவருமான ஜே ஆர் ஜயவர்த்தனாவின் நம்பிக்கைக் குரியவருமானவரே தலைமைதாங்கி வாக்காளர் பதிவுகளைச் சிங்களக் காடையர்களுக்கு வழங்கி எரிக்கவும் கொள்ளையடிக்கவும் கொன்றழிக்கவும் உத்தரவு இட்டதுமல்லாமல் அழிப்பு நடைபெறும் இடங்களில் தானே நின்று அனைத்து அரசவளங்களையும் அழிப்புகளுக்குப் பயன்படுத்தவும் இதனைச் சிறிலங்காப் படைகள் ஊக்குவித்து சட்டத்தை ஒழுங்கை நடை முறைப்படுத்தாது செயற்பட படைகளுக்கு ஆணை வழங்கியவருமாக உள்ளார். இவரதும் இவரோடு ஒத்துழைத்தவர்களதும் செயற்பாடே வெலிகடைச்சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழீழ விடுதலை இயக்கத்தின் நிறுவனர்களான குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் ஆகிய தமிழ் இளம் தலைவர்கள் உட்பட 53 பேர் இந்தக்கலவரக் காலத்தில் இனப்படுகொலைக்கு உள்ளாகினர். இதில் குட்டிமணி தான் இறந்தாலும் தனது கண் தானம் செய்யப்பட வேண்டும். அதன் வழி தன் கண் அதனைப் பெறுபவர் வழி தமிழீழத்தின் விடுதலையைக் காண உதவ வேண்டுமென்ற இறுதி விண்ணப்பம் நடைமுறையாகி விடக் கூடாது என்ற அடிப்படையில் அவரின் கண்க ளைத் தோண்டி எடுத்து இனப்படுகொலை செய்யப் பட்டார்.
அனைத்துலகத் தண்டனை நீதி பரிகார நீதி கிடைக்காத 41 ஆண்டுகள் சிறிலங்கா அரசின் அரசியல் கொள்கையாக கோட் பாடாக ஈழத்தமிழின அழிப்பு முன்னெடுக்கப்பட்டு அதன் வழியான இனப்படுகொலைகள் இனத் துடைப்புக்கள் பண்பாட்டு இனஅழிப்புக்கள் சிங்கள பௌத்த இனத்துக்கான சமுக பொரு ளாதார அரசியல் ஆன்மிக வளர்ச்சி என்ற அரசியல் தத்துவம் 1956 முதல் இன்று வரை 78 ஆண்டுகள் தொடரந்து செயற்படுத்தப்பட்டுக் கொண்டிருப்பது சமகால வரலாறாக உள்ளது. இதன் உதாரணமே இன்றும் சிறிலங்காவின் பௌத்த பிக்குகளின் மகாசங்கங்களும் சிறிலங்காப் படைகளும் இணைந்து செயற்படும் ஈழத்தமிழர் தாயக நில கடல் வளப்பகுதிகளில் விகாரைகளை அமைத்து அதனைத் தொல்லியல் திணைக்களம் சிங்களவர்கள் பூர்வீகப் பகுதிகள் எனச் சட்டத் தகுதியளிக்கும் இன்றைய அரசியலாகவும் உள்ளது.
ஆனால் இன்று 41 ஆண்டுகள் கழநித நிலை யிலும் இதுவரை இந்த 1983 ஜூலை ஈழத்தமிழின அழிப்புக்கான அனைத்துலகச் சட்டங்களின் அடிப் படையிலான எந்தத் தண்டனை நீதியோ அல்லது பரிகார நீதியோ இதுவரை வழங்கப் படவில்லை.
முடிவுரை
இந்த உலக நாடுகளதும் உலக அமைப்புக் களதும் ஈழத்தமிழர்கள் குறித்த அக்கறையின்மை என்பது அவர்களது வெளியக தன்னாட்சி உரிமையை ஈழத்தமிழர்கள் உலகளவில் ஏற்கவைப்பதற்கான எந்த பயனுள்ள செயற்திட்டங்களையும் செவயற் படுத்தாதின் விளைவு எனலாம்.
உண்மையில் 1983 ஜூலை ஈழத்தமிழின அழிப்பை அரசியல் மொழியில் சட்ட மொழியில் பொருளாதார வழியில் வெளிப்படுத்தத் தவறி அதற்கான அனுதாபத்தைப் பெறுவதன் மூலம் அதற்கான நீதியைப் பெறலாம் என்ற ஈழத்தமிழர்களின் அணுகுமுறையும் ஈழத்தமிழர்களுக்கான நீதி கிடைக்காதிருப்பதற்கான காரணமாகவும் உள்ளது. வெறுமனே துன்பங்களைத் துயரங்களைக் காட்சிப்படுத்தி அல்லது எடுத்துரைத்து அரசியலில் நீதி பெற இயலாது. அவை தேவைதான் ஆனால் அதற்கு மேலாக அரசியல் என்பது அதிகாரத்தைக் கட்டமைக்கும் ஒன்று என்ற உண்மையின் அடிப்படையில் ஈழத்தமிழர்கள் தங்கள் இறைமையின் தன்மையினையும் அதன் ஒடுக்கம் எவ்வாறு உலகில் ஈழத்தமிழர்களினதும் அவர்களின் தாயகத்தினதும் பங்களிப்புக்களை இல்லா தொழித்து இன்று தெற்காசியாவின் பாதுகாப்பான அமைதியான வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் ஆபத்துக்களை ஏற்படுத்தியுள்ளன.
இன்றைய சமகால அரசியலில் ஈழத்தமிழர்களின் இறைமை மீள்கட்டமைப்பு உலகின் பாதுகாப்பான அமைதி வாழ்வுக்கும் வளர்ச்சிகளுக்கும் முக்கியம் என்ற அடிப்படையில் தங்கள் 1983 ஈழத்தமிழின இனஅழிப்பு வரலாற்றை வரைந்தாலே இந்த இனஅழிப்பு ஈழத்தமிழர்களுக்கு மட்டுமல்ல முழு மனித குலத்துக்கும் எத்தகைய சிக்கல் நிலைகளைச் சிறிலங்காவின் ஈழத்தமிழின அழிப்பு தோற்றுவித்துள்ளது என்பது தெளிவாகி உலகம் ஈழத்தமிழர் தேசிய பிரச்சினைக்கான தீர்வு என்பது அனைத்துலகத்தின் தேவை என்ற அடிப்படையில் செயற்படும். இதற்கு ஈழத்தமிழரின் வரலாறு குறித்த உயராய்வு மையம் ஒன்று புலத்தில் அமைக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்கள் புத்திஜீவிகள் அனைத்து ஈழத்தமிழ் மக்கள் என்போரை இணைத்த ஆற்ற லாக அது தன்னை வெளிப்படுத்த வேண்டும் என்பதே இக்கட்டுரையின் அழைப்பாகவுள்ளது.



