விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்க ஐரோப்பிய நீதிமன்றம் எடுத்துள்ள முடிவு

326
140 Views

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை கறுப்புப் பட்டியலில் இருந்து நீக்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளது.

இலங்கை அரசாங்கம் இதுவரையில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஐரோப்பிய நீதிமன்றத்தில் எவ்வித குற்றச்சாட்டும் முன்வைக்காத நிலையில் குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

கடந்த 16ஆம் திகதி குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவை தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் கறுப்புப் பட்டியலில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை நீக்கினாலும்கூட, இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பான ஹமாஸ் அமைப்பு குறித்த பட்டியலில் இருந்து நீக்கப்பட மாட்டாது எனவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here