யாழ்ப்பாணத்தில இருந்து ட்ரோலர் படகில் சென்று இந்தியாவின் தொண்டிப் பகுதியில் இறங்கிய இருவருக்கு 7 மாத சிறைத் தண்டணை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதியன்று யாழ்ப்பாணம் – குருநகரில் இருந்து சென்று தமிழகம் – தொண்டிப் பகுதியில் இறங்கிய வேளை தமிழக மீனவர்கள் வழங்கிய தகவலுக்கமைய தமிழகப் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இருவருக்கே தற்போது 7 மாத சிறைத் தண்டணை விதிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் ஊடுருவினார்கள் என்ற குற்றச்சாட்டில் யாழ். குருநகரைச் சேர்ந்த சீலன் (வயது 27) மற்றும் அருள்தாஸ் (வயது 34) ஆகிய இருவர் மீதும் திருவாடானை நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு விசாரணை இடம்பெற்று வந்தது. இந்நிலையில், நேற்று வழங்கப்பட்ட தீர்ப்பில் இருவருக்கும் 7 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.



