குர்தீஸ் பகுதிமீது வேதியல் ஆயுத்தத் தாக்குதல்

209
132 Views

சிரியாவின் வடபகுதியில் உள்ள குர்திஸ் நிலைகள் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ள துருக்கி தடைசெய்யப்பட்ட நேபாம் குண்டுகளையும் வெள்ளை பொஸ்பரசினையும் பயன்படுத்திவருவதாக குர்திஸ்அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

துருக்கியின் தாக்குதல் ஆரம்பித்து எட்டு நாள்களின் பின்னர் விடுத்துள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ள குர்திஸ் அதிகாரிகள் முக்கிய எல்லைப்புற நகரான ரஸ் அல் அய்னில் கடும் எதிர்ப்பை எதிர்கொண்டுள்ள நிலையிலேயே துருக்கி படையினர் தடை செய்யப்பட்ட ஆயுதங்களை பயன்படுத்துகின்றனர் என குர்திஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

துருக்கி ஆக்கிரமிப்பாளர்கள் அனைத்து வகையான ஆயதங்களையும் பயன்படுத்துகின்றனர் என தெரிவித்துள்ள குர்திஸ் அதிகாரிகள் தனது திட்டம் தோல்வியடைய தொடங்கியுள்ளதால் துருக்கி ஜனாதிபதி தடை செய்யப்பட்டுள்ள ஆயுதங்களை பயன்படுத்துகின்றார் எனவும் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை இந்த குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ள துருக்கி தனது ஆயுதங்களில் இரசாய ஆயுதங்கள் இல்லையென்பது அனைவருக்கும் தெரிந்த விடயம் மாறாக  குர்திஸ் ஆயுதக்குழுவினரே அவ்வாறான ஆயுதங்களை பயன்படுத்துகின்றனர் என தெரிவித்துள்ளது.

இதேவேளை குர்திஸ் அதிகாரிகளின் இந்த குற்றச்சாட்டை உறுதிப்படுத்த முடியவில்லை என தெரிவித்துள்ள சிரியாவின் மனித உரிமை நிலவரத்தை கண்காணிப்பதற்கான அமைப்பு அதேவேளை ரஸ் அல் அயன் பகுதியில் சிக்கிய பலர் எரிகாயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளது.

இதேவேளை சிரிய அதிகாரிகள் எரிகாயங்களுடன் சிறுவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதை காண்பிக்கும் வீடியோக்களை வெளியிட்டுள்ளனர். இது; தடை செய்யப்பட்ட ஆயுதங்களால் உண்டான காயம் என மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்த குற்றச்சாட்டுகள் குறித்து ஆராய்வதற்காக உலகநாடுகள் சர்வதேச நிபுணர்களை அனுப்பவேண்டும்  என சிரிய ஜனநாயக இராணுவம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here