தமிழர் பிரதேசத்தில் தமிழிற்கு முதலிடம் -சிங்களப் பத்திரிகை அதிருப்தி

இன்று திறந்து வைக்கப்பட்ட யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் முதலிடத்தில் தமிழ் மொழியும் இரண்டாவதாக சிங்கள மொழியும் இடம்பெற்றுள்ளமை தொடர்பாக கொழும்பிலிருந்து வெளிவரும் சிங்கள ஊடகமொன்று அதிருப்தி வெளியிட்டுள்ளது.

இவ்வாறு சிங்கள மொழி இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளமை குறித்து பலரும் ஆச்சரியம் வெளியிட்டுள்ளதாக சிங்கள ஊடகமான திவயின சுட்டிக்காட்டியுள்ளது.

போக்குவரத்து அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவின் யோசனைக்கு அமைய, பலாலி விமான நிலையம் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தென்பகுதியில் கட்டுநாயக்க விமான நிலையத்தின் பெயர் பலகைகளில் முதலாவதாக சிங்கள மொழியே இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழர் பிரதேசத்திலேயே தமிழ் மொழிக்கு முதலிடம் கொடுப்பதை ஏற்றுக் கொள்ளாத சிங்கள சமூகம், தமிழர்களை சுதந்திரமாக வாழ விடும் என்பதை நினைத்துப் பார்க்க முடியாது.