கனமழை காரணமாக தம்பலகாமம் பிரதேச செயலக பகுதியில் பல தாழ் நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் வயல் நிலங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.
தொடர் அடை மழை காரணமாக முள்ளிப்பொத்தானை அல்ஹிஜ்ரா 1ம் குறுக்குத் தெரு வீதியானது நீரில் மூழ்கியுள்ளதுடன் இவ் வீதி ஊடாக பயணம் செய்ய முடியாது என மக்கள் தெரிவிக்கின்றனர். பாடசாலை மாணவர்கள் உட்பட பலர் இவ் வீதியையே பயன்படுத்தி வருகின்றனர்.வெள்ள நீரை வெளியேற்ற ஏதாவது முறையான திட்டமொன்றை மேற்கொள்ளுமாறு அப் பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.



