ஜோ பைடனின் வாகன அணியுடன் கார் மோதியது

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் கார் மீது இனந்தெரியாத கார் மோதியதால் அமெரிக்காவில் பதற்றம் எற்பட்டுள்ளதுநேற்று(17) இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில் பைடனும்அவரது மனையியும் காயமடையவில்லை என அமெரிக்காவின் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

biden car accide ஜோ பைடனின் வாகன அணியுடன் கார் மோதியதுஅமெரிக்காவின் வில்மிங்டன் பகுதியில் உள்ள டெலவெறவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது அமெரிக்க அதிபரும் அவரின் மனைவியும் தமது தலைமையகத்தில்இருந்துவெளியேறியபோது மிகப்பெரும் சத்தம் ஒன்று கேட்டதாகவும்அவரின் வாகன அணியுடன் கார் ஒன்று வேகமாக வந்து மோதியதாகவும் அமெரிக்காவின் இரகசிய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

உடனடியாகவே மோதிய காரை சூழந்த இரகசிய பாதுகாப்பு அதிகாரிகள் தமது துப்பாக்கிகளை எடுத்து சுடும் நிலைக்கு கொண்டுவந்திருந்தனர்எனினும் காரின் ஓட்டுனர் தனது கைகளை உயர்த்தியதும்அந்த பிரதேசத்தில் பெருமளவான ஊடகவியலாளர் கள் பிரசன்னமாகியிருந்ததும் அவரின் உயிரை காப்பாற்றியதாக தெரிவிக்கப்படுகின்றது.

தனது மனைவியின் வரவுக்காக பைடன் காத்திருந்தவேளை இந்த தாக்குதல் இடம்பெற்றதும்அவர் அதில் அதிர்ச்சியடைந்து காணப்பட்டதும் அவரை சூழ பாதுகாப்பு படையினர் உடனடியாகவே சூழந்துகொண்டதும் தெளிவாக அவதானிக்கப்பட்டதாக என்பிசி ஊடனம் தெரிவித்துள்ளது.

பைடனின் வாகன அணிக்கான பாதுகாப்புக்களை அமெரிக்காவின் இரகசிய படையணி செய்துவருவதாகவும், தற்போதைய சம்பவம் அவரை கொலை செய்யும் நொக்கத்துடன் மேற்கொள்ளவில்லை எனவும்இ இரகசிய பாதுகாப் படையணியின் கட்டளை அதிகாரி கொபெக் தெரிவித்துள்ளார்.