மான்செஸ்டர் நகரில் கத்திக்குத்து 5 பேர் காயம்

315
286 Views

இங்கிலாந்தில் மான்செஸ்டர் நகரில் கத்தியால் நபர் ஒருவர் தாக்குதல் நடத்தியதில் 5 பேர் காயமடைந்தனர்.இதுகுறித்து போலீஸார் தரப்பில், “இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் பல்பொருள் அங்காடி ஒன்றில் கையில் பெரிய கத்தியுடன் வந்த நபர் ஒருவர் தாக்குதல் நடத்தினார். இதில் 5 பேர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதல் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கும் தீவிரவாத இயக்கங்களுக்கும் தொடர்பு உள்ளதா என்று விசாரணை நடந்து வருகிறது” என்று தெரிவித்துள்ளனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு லேசான காயமே ஏற்பட்டுள்ளதாகமாகவும், இந்தத் தாக்குதலின் பின்னணி நோக்கம் குறித்து அதிகாரிகள் விசாரித்து வருவதாக இங்கிலாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here