இந்தியப் பிரதமரும் – சீன அதிபரும் தமிழகம் மாமல்லபுரத்தில் சந்தித்தனர்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபரும் இன்று மாமல்லபுரத்தில் உத்தியோகப் பற்றற்ற ஓர் சந்திப்பை மேற்கொண்டனர். இவர்களின் சந்திப்பின் போது, இரு நாட்டுத் தலைவர்களைத் தவிர மொழிபெயரப்பாளர்கள் மட்டுமே உடனிருந்தனர். வேறு எந்த அதிகாரிகளும் இவர்களுடன் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையிலிருந்து கிழக்குக் கடற்கரை சாலை வழியாக 62 கிலோ மீற்றர் சென்றால் மாமல்லபுரம் என்ற இடம் உள்ளது. இது மிகப் பிரபல்யமான ஓர் சுற்றுலாத் தலமாக விளங்குகின்றது. இங்கு பல்லவர் காலத்தைச் சேர்ந்த பல அற்புதமான படைப்புகள் காணப்படுகின்றன. குடைவரைக் கோயில்கள், ஒற்றைக் கல் ரதம், கடற்கரைக் கோயில்கள், அர்ச்சுனன் தபசு சிற்பம், கிருஸ்ணரின்  வெண்ணெய் உருண்டைக் கல் போன்ற பல பெயர்போன படைப்புக்கள் இங்கு காணப்படுகின்றன.

கடந்த செப்டெம்பர் மாதம் 20ஆம் திகதி சீனத் தூதரக அதிகாரிகள் மாமல்லபுரத்தைப் பார்வையிட்டுச் சென்றனர்.

தமிழ் நாட்டில் இதுபோன்ற இரு தலைவர்கள் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவது இதுவே முதன்முறையாகும்.

இந்தியா தற்போது வங்காள விரிகுடாக் கடலை தனது ஆதிக்கத்திற்குள் வைத்துக் கொள்ள விரும்புகின்றது. இதனால் இந்தக் கடலை அண்மித்துள்ள நாடுகளை தன்பக்கம் ஈர்த்துக் கொள்ளவும் முயற்சிக்கின்றது. இதனாலேயே இரு நாட்டுத் தலைவர்களின் சந்திப்பும் மாமல்லபுரத்தில் நடந்தது என்று ஒரு சாரார் கருத்துத் தெரிவித்த போதிலும்,

இதற்கு மாறாக, இது ஓர் அரசியல் முயற்சியே என்று மற்றொரு சாரார் கருதுகின்றனர். தமிழகத்தில் பாஜகவிற்கான ஆதரவை ஏற்படுத்தவும், பலப்படுத்தவுமே, பிரதமர் மோடி தமிழகத்தை தற்போது முதன்மைப்படுத்துகின்றார் என்றும் அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்.

china tn இந்தியப் பிரதமரும் – சீன அதிபரும் தமிழகம் மாமல்லபுரத்தில் சந்தித்தனர்இன்று மாலை 5 மணியளவில் தமிழகம் மாமல்லபுரத்தை வந்தடைந்த சீன அதிபர் ஷி ஜின்பிங்கை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார். தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டையை பிரதமர் மோடி அணிந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இரு நாட்டுத் தலைவர்களையும் வரவேற்க மேள, நாதஸ்வரங்கள், தப்பாட்டம், மயிலாட்டம், நடனம் போன்ற தமிழக பாரம்பரிய இசைக்கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

வீதிகள் எங்கும் துப்பரவு செய்யப்பட்டு,  செப்பனிடப்பட்டு ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது.

மதியம் 12.40 மணிக்கு இந்தியப் பிரதமர் மோடி சென்னை விமான நிலையம் வந்தடைந்தார்.

அதன் பின்னர் சீன அதிபரின் வாகனங்களும், அதிகாரிகளும் வருகை தந்தன. அதன் பின்னரே சீன அதிபர் வருகை தந்தார்.

பத்திரிகையாளர்களுக்கென பிரத்தியேகமாக தயார் செய்யப்பட்ட இடம் ஒன்று ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது. பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

இந்தியப் பிரதமருடன் இணைந்து அங்குள்ள வரலாற்றுச் சின்னங்களை சீன அதிபர் பார்வையில்டார். இந்த வேளையில் இரு தலைவர்களுடனும் வரும் தூதுக் குழுவினர் சற்று தொலைவிலேயே நின்றிருந்ததை காண முடிந்தது.

அர்ச்சுனன் தபசு ஐந்து ரதங்கள், கடற்கரைக் கேயில் ஆகிய வரலாற்றுச் சின்னங்களின் முக்கியத்துவத்தை பிரதமரே சீன அதிபருக்கு விளக்கிக் கூறினார். அப்போது மொழிபெயர்ப்பாளர்களைத் தவிர இந்தியத் தொல்லியல்துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவரும் உடனிருந்தார்.

ஐந்து ரதங்களைப் பார்வையிட்ட பின்னர் இரு தலைவர்களும் அமர்ந்திருந்து இளநீர் பருகினர். அவ்வேளையிலும் பல விடயங்கள் பற்றிப் பேசிக் கொண்டேயிருந்தனர்.

இரவு உணவிற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்த உணவு விருந்தில் கலந்து கொள்பவர்கள் பற்றி முழுமையான தகவல்கள் வெளியாகவில்லை. இருந்தாலும் சம்பந்தப்பட்டவர்களே இதில் கலந்து கொள்வார்கள் என இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதாவது இரு நாட்டுத் தலைவர்கள், உடனிருக்கும் அதிகாரிகள் மட்டுமே இந்த இரவு உணவு விருந்தில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த உணவு விருந்தின் போது இரு நாட்டு அதிபர்களும் மொழிபெயர்ப்பாளர்களுடன் அமர்ந்திருப்பார்கள்.

விருந்தில் தமிழக உணவுகளும், சீன உணவுகளும் கிடைக்கும் வகையில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. இதன் பின்னர் மீண்டும் சாலை வழியே சீன அதிபர் சென்னை திரும்புவார்.

நாளை(12) மீண்டும் மாமல்லபுரம் வரும் சீன அதிபர், பிரதமர் தங்கியுள்ள விடுதியில் அவரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தைகள் நடத்துவார். இந்தச் சந்திப்பின் போதும் இரு தலைவர்களுடன், மொழிபெயர்ப்பாளர்கள் மட்டுமே பங்குபற்றுவார்கள். இதன் பின்னர் அதிகாரிகளுடன் இரு தவைர்களும் பேச்சுவார்த்தை நடத்துவார்கள்.

இந்தப் பேச்சுவார்த்தையானது இரு நாடுகளுக்கிடையேயான பல்வேறு விடயங்கள் குறித்து இரு தலைவர்கள் மட்டத்திலும் புரிதலை ஏற்படுத்துவதை அடிப்படையாகக் கொண்டிருக்கும். பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர், இரு நாடுகளும் இணைந்து அறிக்கை எதையும் வெளியிட மாட்டா. மாறாக, இரு நாடுகளின் சார்பில் தனித் தனியே அறிக்கைகள் வெளியிடப்படும்.

இந்தப் பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் சென்னையிலிருந்து சீன அதிபர் தன் விஜயத்தை முடித்துக் கொண்டு புறப்படுவார்.  இந்த விஜயத்தின் போது இரு தலைவர்களும் சுமார் 6 மணிநேரம் ஒன்றாக இருப்பார்கள்.