இலங்கையில் 90% கொவிட் நோயாளிகள் ஒமிக்ரோன் பிறழ்வால் பாதிக்கப்பட்டுள்ளனர் -பொதுச் சுகாதார பரிசோதகர் சங்கம்

இலங்கையில் 90% கொவிட் நோயாளிகள்

இலங்கையில் 90% கொவிட் நோயாளிகள்: நாட்டில் தற்போது பதிவாகியுள்ள கோவிட்-19 நோயாளர்களில் 90% ஆனவர்கள் ஒமிக்ரோன் பிறழ்வால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வக அறிக்கைகள் வெளிப்படுத்துவதாக இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது.

எதிர்காலத்தில் இது 100% ஆக அதிகரிக்கும் என சங்கத்தின் தலைவரான உபுல் ரோஹன தெரிவித்துள்ளார். ஒமிக்ரோன் பிறழ்வினால் நாட்டில் பதிவாகும் கோவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஒமிக்ரோன் பிறழ்வினால் பாதிக்கப்பட்டவர்கள் தடுப்பூசியின் மூன்று டோஸ்களையும் பெற்றிருந்தால், கடுமையான சிக்கல்கள் மற்றும் இறப்புகளைத் தடுக்க முடியும் என அறிக்கைகள் காட்டுகின்றன என்றும் அவர் வலியுறுத்தினார்.எனவே இதுவரை கோவிட்-19 க்கு எதிராக தடுப்பூசியைப் பெறாதவர்கள் உடனடியாக தடுப்பூசி போட வேண்டும்.

நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரித்தாலும் தடுப்பூசிகள் மூலம் உயிர்களைக் காப்பாற்ற முடியும் என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.நாட்டின் சுகாதார அமைப்பால் அதிகளவான தொற்றாளர்களைக் கையாள முடியாது என்பதற்கான எச்சரிக்கை அறிகுறிகள் இருப்பதாகவும், நிலைமையின் தீவிரத்தை பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் நோயாளிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்தால், சுகாதார அமைப்பால் தொற்றாளர்களை நிர்வகிக்க முடியாமல் போனால், கோவிட்-19 தொடர்பான இறப்புகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Tamil News