வவுனியாவில் தடுப்பூசி போடாமையினால் 89 வீதமான இறப்புக்கள்

வவுனியாவில் தடுப்பூசி

வவுனியாவில் தடுப்பூசி போடாமையினால் கொரோனா தொற்றினால் இதுவரை  89.25 வீதமானவர்கள் உயிரிழந்துள்ளனர். இவர்கள் எந்த ஒரு தடுப்பூசியின் ஒரு டோசினை கூட செலுத்தியிருக்கவில்லை என்று சுகாதார பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

கொரோனா தொற்று பரவலடைந்து வரும் நிலையில் வவுனியாவில் அதிகமான இறப்புக்கள் பதிவாகியிருந்தது,அந்தவகையில் இந்த மாதம் 15 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியினுள் கொரோனா தொற்றினால் மரணமடைந்தவர்களில் 89.25 வீதமானவர்கள் தடுப்பூசி எதனையும் பெற்றுக்கொள்ளாததுடன், 10.75 வீதமானவர்கள் தடுப்பூசியின் ஒரு டோசினை மாத்திரம் செலுத்திக்கொண்டுள்ளனர்.

இதேவேளை தடுப்பூசியின் இரு டோசினையும் பெற்றுக்கொண்ட எவரும் இதுவரை உயிரிழக்கவில்லை என்று சுகாதார பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன

ilakku-weekly-epaper-150-october-03-2021

Leave a Reply