சுதந்திரக் கட்சியின் பொறுப்பில் இருந்து 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நீக்கம்

69 Views

அண்மையில் அமைச்சுப் பதவிகளைப் பெற்ற சுதந்திரக் கட்சியின் எட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சியில் வகித்திருந்த பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

அதற்கமைய, மாவட்ட தலைவர்கள், தொகுதி அமைப்பாளர்கள் உள்ளிட்ட பதவிகள் மற்றும் மத்திய செயற்குழுவின் உறுப்பினர் பதவிகளிலிருந்தும் சம்பந்தப்பட்டவர்களை நீக்குவதற்கு கட்சியின் தலைவர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

மஹிந்த அமரவீர, நிமல் சிறிபால டி சில்வா, லசந்த அழகியவன்ன, சாந்த பண்டார, சுரேன் ராகவன், சாமர சம்பத் தசநாயக்க, ஜகத் புஷ்பகுமார, ரஞ்சித் சியம்பலாபிட்டிய ஆகியோர் அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சுப் பதவிகளைப் பெற்றனர்.

இந்நிலையில் அவர்கள் சுதந்திரக் கட்சியில் வகித்து வந்த சகல பதவிகளில் இருந்தும் மத்திய குழு உறுப்புரிமையிலிருந்தும் உடனடியாக நீக்குவதற்கு அக்கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுத்துள்ளார்.

Leave a Reply