78 ஆயிரம் ஆண்டு பழமையான குழந்தையின் கல்லறை கண்டுபிடிப்பு

78 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஒரு குழந்தை நல்லடக்கம் செய்யப்பட்டது, ஆப்ரிக்கவின் மிகப் பழமையான இடுகாட்டுப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.

மத்திய கற்காலத்தைச் சேர்ந்த 3 வயது குழந்தையின் கல்லறை கென்யா நாட்டில் ஒரு குகையில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

அக்குழந்தையின் கல்லறை மற்றும் எச்சங்களை ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்கள், அக்குழந்தையின் தலையை எப்படி ஒரு தலையணையில் கிடத்தி இருப்பது போல அடக்கம் செய்திருக்கிறார்கள் என, நேச்சர் என்கிற பத்திரிகையில் விவரித்து இருக்கிறார்கள்.

விஞ்ஞானிகள் அக்குழந்தையை ‘மடொடொ’ என பெயரிட்டு இருக்கிறார்கள். மடொடொ என்றால் ஸ்வாஹிலி மொழியில் ‘அந்த குழந்தை’ என்று பொருள்.

நன்றி- பிபிசி