77 ஆண்டுகளுக்கு முன்னரான நோர்மண்டித் தரையிறங்கல் தினமான D-Day

77 ஆண்டுகளுக்கு முன்னர் 06.06.1944 இல் பிரான்சின் நோர்மண்டிக் கடற்கரை நகரில் கடல்வழியாக நேசப் படைகள் இங்கிலாந்துப் படைகளின் தரையிறங்கி 2வது உலகப்போரில் கிட்லரின் மத்திய படைகளுக்கு எதிரான தாக்குதலை தொடங்கின.

இப்போரில் உயிர்த்தியாகம் செய்த 27000 நேசப்படையினரை நினைவு கூறும் முகமாக ஒவ்வொரு ஆண்டும் இந்நாளை டீ-டே (D- Day) நாளாகத் தங்கள் மாவீர்களுக்கு 11 மணி 11 நிமிடத்திற்கு எழுந்து நின்று அமைதி காத்து வீரவணக்கம் செய்வர்.

இம்முறை கோவிட் தொற்றுக்கு மத்தியிலும் நேசநாடுகளின் இராணுவ மரியாதை நோர்மண்டியில் மிக அழகாக அமைக்கப்பட்டுள்ள நினைவு மண்டபத்தில் இடம்பெற்றது. டீ- டே (D- Day) என்ற சொற்பதம் குறித்த நாளில் என்னும் இராணுவக் குறியீட்டைக் குறிக்கும் இராணுவ அடையாளமொழி, குறித்த மணித்துளியைக் குறிக்க எச் – அவர் (H – Hour) என்ற இராணுவ மொழிக்குறியீடு பயன்படுத்தப்படுகிறது.

குறித்த நாளில் குறித்த நேரத்தில் என்னும் இலக்குடன் முன்னெடுக்கப்படும் திட்டமிடல்களே வீ –டே (V-Day) க்கு இட்டுச் செல்லும் என்பது உலக வரலாறு தரும் பாடம். ஆந்த வகையில் 11.11.1945 இல் 2வது உலகப் போர் நிறைவுக்கு கொண்டு வரப்பட்டதை நேசநாடுகள் இன்றும் நவம்பர் 11ம் திகதி 11 மணி 11 நிமிடத்திற்கு உயிர்த்தியாகம் செய்த மாவீர்களுக்கு வீரவணக்கம் செய்து கொண்டாடி வருகின்றனர்.

இந்த உலக வழமைகள் உலகெங்கும் வாழும் ஈழமக்களுக்கு தங்கள் மண்மீட்புப் போரில் குறித்த நாளில் ஈழ மக்களின் தேசியப் படைவீர்கள் நடத்திய சிங்கள அழிப்புப் படைகளுக்கு எதிரான தாக்குதல்கள் குறித்த எண்ணங்கள் நினைவுக்கு வருவது இயல்பு.

குறித்த நாளில் குறித்த இலக்கை அவ்வெற்றிகள் வழி நெருங்கிய ஈழமக்களின் மக்கள் படையினரின் நிரந்தர வெற்றி, பிராந்திய உலக வல்லாண்மைகளின் உதவியுடன் சிறீலங்கா இன அழிப்பாளர்கள் 18.05.2009 இல் நடாத்திய முள்ளிவாய்க்கால் ஈழத்தமிழின அழிப்பு என்னும் 21ம் நூற்றாண்டின் மிகக் கொடிய மனிதப் படுகொலைகள் வழி பின்னடைவுக்கு உள்ளானமை உலக வரலாறு.

அன்று முதல் இன்று வரை 12 ஆண்டுகளாக இன அழிப்பையே ஒற்றையாட்சிச் சிங்களப் பெரும்பான்மை ஆட்சி வழியாக கட்டமைக்கப்பட்ட சிங்கள பௌத்த அதிகாரபீடமான சிறீலங்கா ஜனாதிபதி மூலம் ஈழமக்கள் தொடர்ந்து இன அழிப்புடன் கூடிய இனங்காணக்கூடிய அச்சவாழ்வில் தொடர்ந்து வாழ்ந்து மடிந்து கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் இருந்து ஈழமக்களுக்கான வீ-டேயை உலகின் மனிதாயத் தன்மையுடைய உலக மக்களும் உலக நாடுகளும் உலக அமைப்புக்களும் உருவாக உதவுவர் என்பதே இந்நாளில் ஈழமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.