சீன குடியரசு நிறுவப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவடைவதை கொண்டாடும் வகையில் அந்நாட்டின் முக்கிய நகரங்கள் வண்ண வண்ண விளக்குகளால் ஒளிர்ந்து கண்ணுக்கு விருந்தளித்தன.
சீன தலைநகர் பெய்ஜிங்கில், தேசிய மைதானம், சீன பெருஞ்சுவர் உள்ளிட்டவற்றில் நாட்டின் மீதான அன்பையும் விருப்பத்தையும் பிரதிபலிக்கும் வகையிலான வாசகங்கள் வண்ண விளக்குகளால் ஒளியூட்டப்பட்டன.
வடகிழக்கு சீனாவின் ஹீலோங்ஜியாங் மாகாணத்தில் உள்ள ஹர்பின் நகரத்தில் உள்ள சிறப்பு மிக்க கட்டமைப்புகளின் படங்கள் வண்ண விளக்குகளால் காட்சிப்படுத்தப்பட்டன.
இதேபோல் கிழக்கு சீனாவின் சாண்டோங் மாகாணத்தின் தலைநகரான ஜினான் நகரில் உள்ள 923 கட்டிடங்கள், வண்ண விளக்குகளின் நடனத்தால் காண்போரை மெய்மறக்கச் செய்தன.