ஜனவரி மாதம் முதல் நவம்பர் மாதம் முதல் வரையான காலப் பகுதியில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விமான நிலையப் பிரிவில் பதிவு செய்யாமல் சுற்றுலா வீசாவைப் பயன்படுத்தி சட்டவிரோதமான முறையில் தொழில்களுக்காக வெளிநாடுகளுக்குச் செல்ல முயற்சித்த 586 பேரை விமான நிலையத்திலிருந்து திருப்பி அனுப்பியதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
சுற்றுலா வீசா மூலம் வெளிநாடுகளுக்குச் சென்று அங்கு பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உள்ளான பெண்கள் குறித்து பணியகத்துக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் அவர்களில் பெரும்பாலானோர் ஓமன் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் பணி புரிவதற்குச் சென்றுள்ளதாகவும் பணியகம் தெரிவித்துள்ளது.