உயர் பதவிகளில் உள்ள 50 வீதமானவர்களின் பதவிகள் பறிபோகும்

செயற்கை நுண்ணறிவின் அதிகமான வளர்ச்சியினால் தொழில்நுட்பம், நிதித்துறை உட்பட பல உயர்மட்ட பதவிகளில் உள்ள தொழிலாளர்களின் பதவிகள் எதிர்வரும் 5 வருடங்களில் இல்லாமால் போகலாம் என அமெரிக்காவை தளமாகக் கொண்ட அந்திரோப்பிக் என்ற செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தின் தலைவர் டாறியோ அமொடி கடந்த புதன் கிழமை(28) தெரிவித்துள்ளார்.
தொழில்நுட்டம் போன்ற துறைகளில் ஆரம்ப பணியாளர்க ளாக சேரும் தொழிலாளர்களின் 50 வீத தொழில்கள் எதிர்வரும் 5 வருடங்களில் பறிபோகலாம். அமெரிக்க அரசு மற்றும் ஆய்வுத் துறைகளில் பணியாற்று பவர்கள் அதற்கு தம்மை தயார்படுத்த வேண்டும். எதிர்வரும் 5 வருடங்க ளில் செயற்கை நுண்ணறிவினால் அமெரிக்காவில் 10 முதல் 20 வீத வேலை வாய்ப்பின்மை  ஏற்படலாம்.
தொழில்நுட்பம், நிதி, சட்டம், ஆலோ சனை மையம் உட் பட பல தொழில்துறைகளில் செயற்கை நுண்ணறிவை புகுத்துவது தொடர்பில் நிறுவனங்கள் பணியாற்றி வருகின்றன. பல நிறுவனங்களில் சடுதியான மாற்றங்கள் ஏற் படலாம். செயற்கை தொழில்நுட்பம் மூலம் வினைத்திறன் உள்ள பணிகள், புதிய கண்டு பிடிப்புக்கள் மற்றும் நிதி குறைப்புக்களை நிறு வனங்கள் மேற்கொள்ள முடியும். எனினும் அமெரிக்கா போன்ற நாடுகள் இதில் மௌனம்காத்து வர முற்பட்டாலும், சீனா போன்ற நாடுகள் இந்த தொழில்நுட்பத்தில் அமெரிக்காவை பின்தள்ளிவிடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்..