தந்தை செல்வாவின் 45வது ஆண்டு நினைவு நாள் இன்று- மட்டக்களப்பில் அஞ்சலி

தந்தை செல்வாவின் 45வது ஆண்டு நினைவு

இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் தந்தை செல்வாவின் 45வது ஆண்டு நினைவு நிகழ்வு இன்று மட்டக்களப்பு தந்தை செல்வா சதுக்கத்தில் அனுஸ்டிக்கப்பட்டது.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் சிரேஸ்ட உபதலைவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், மதத்தலைவர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைபபின் பாராளுமன்ற உறுப்பினர்கள்,  இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் , மட்டக்களப்பு மாநகர முதல்வர் மற்றும் பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இதன் போது தந்தை செல்வாவின் திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு, மலரஞ்சலியுடன், அகவணக்கமும் செலுத்தப்பட்டது.

Tamil News