தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக இந்தியாவுக்கு சென்றுள்ள சிறீலங்கா அதிபர் கோத்தபாயா ராஜபக்சாவுக்கு கடனாக 450 மில்லியன் டொலர்களை இந்தியா வழங்கியுள்ளது.
இந்த கடன் தொகையில் 50 மில்லியன் டொலர்கள் பாதுகாப்புக்கும் 400 மில்லியன் டொலர்கள் சிறீலங்காவின் அபிவிருத்திக்கும் என இந்தியப் பிரதமர் தெரிவித்துள்ளார்.
நெருங்கிய நட்புநாடு என்ற முறையில் சிறீலங்கா தமக்கு முக்கியமானது என தெரிவித்துள்ள இந்தியப் பிரதமர் சிறீலங்காவின் முழு அபிவிருத்தியையும் இந்தியா மேற்கொள்ளும் எனவும் தெரிவித்துள்ளார்.