சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்கு செல்வதற்கு முயற்சித்த குற்றச்சாட்டில் 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உனவட்டுன பகுதியிலுள்ள விடுதியொன்றில் தங்கியிருந்த போதே குறித்த 45 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கடற்படையினரும் ஹபராதுவ காவல்துறையினரும் இணைந்து இன்று(23) காலை மேற்கொண்ட சுற்றிவளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்களாவர். கைது செய்யப்பட்டவர்களில் மூன்று குழந்தைகளும் அடங்குகின்றனர்.