மருந்துப் பொருட்களை இறக்குமதி செய்ய 400 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறப்பட்டன-சுகாதார அமைச்சு தகவல்

மருந்துகளை இறக்குமதி செய்ய  400 மில்லியன் டொலர்கள்

அத்தியாவசிய மருந்துகளை இறக்குமதி செய்வதற்காக 400 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் ஏனைய நாடுகளில் இருந்து இந்த உதவிகள் கிடைத்துள்ளதாக அமைச்சின் செயலாளர் ஜனக சந்திரகுப்த தெரிவித்துள்ளார்.

மேலும், சீன மற்றும் ஜப்பானிய அரசாங்கங்களிடமிருந்தும் உதவி பெறப்பட்டுள்ளது, இது எதிர்வரும் மாதங்களுக்கு தேவையான அத்தியாவசிய மருந்துகளை இறக்குமதி செய்ய உதவும் என அமைச்சு அறிவித்துள்ளது.

Tamil News