40 பேருக்கு நேற்று கொரோனா ; இந்தியாவிலிருந்து திரும்பிய 29 பேர் அமெரிக்காவிலிருந்து வந்த 11 பேர்

இலங்கையில் நேற்று 40 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதில், 29 பேர் இந்தியாவின் மும்பையிலிருந்து நாட்டுக்கு வந்த கப்பலில் பணி யாற்றுபவர்கள். 11 பேர் அமெரிக்காவிலிருந்து நாடு திம்பியவர்கள்.

இவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தல் முகாம்களில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதன் மூலம் நாட்டின் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 1,991 ஆக உயர்ந்துள்ளது.