40 தொகுதிகளிலும் திமுக+ முன்னிலை

தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி தொடங்கி எண்ணப்படுகின்றன. தற்போதைய நிலவரப்படி திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளது.

தருமபுரி மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் மணி 3 லட்சத்து 89 ஆயிரத்து 837 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இங்கு பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணி தோற்றுள்ளார். அவரைவிட திமுக வேட்பாளர் மணி 18,524 வாக்குகள் அதிகமாக பெற்றுள்ளார்.

தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழி வெற்றியை நோக்கி முன்னேறி வருகிறார். அவர் இரண்டாம் முறையாக மக்களவை உறுப்பினராகிறார்.

கோவை மக்களவைத் தொகுதியில் 10-வது சுற்று முடிவின்படி திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் — 2,51,490 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். பாஜக அண்ணாமலை 2,03,568 வாக்குகளும் , அதிமுகவின் சிங்கை ராமச்சந்திரன் 1,05,234 வாக்குகளும், நாம் தமிழர் வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் 36,050 வாக்குகளும் பெற்றுள்ளனர். நோட்டாவுக்கு 5,360 வாக்குகள் பதிவாகியுள்ளன.