கர்நாடகாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 38 இலங்கையர்கள் உண்ணாவிரதத்தைக் கைவிட்டனர்

171 Views

இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தின் மங்களூரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் 38 பேரின் உண்ணாவிரத போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

அவர்களின் கடவுச்சீட்டுகள் சென்னையிலுள்ள இலங்கை தூதரகத்தினால் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து நேற்றிரவு அவர்களின் உண்ணாவிரத போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கனடாவிற்கு முகவர்களால் அழைத்துச்செல்லப்பட்ட போது கைது செய்யப்பட்டதாகக் கூறப்படும் 38 இலங்கையர்கள், கர்நாடகா மாநிலத்தின் மங்களூரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த 38  இலங்கையர்களும் நேற்று முன்தினம் முதல் தொடர் உண்ணாவிரதத்தை முன்னெடுத்திருந்தனர்.

தற்போது கடவுச்சீட்டு வழங்கப்பட்டுள்ளதால், நாடு திரும்புவதற்காக இந்திய அரசின் அனுமதிக்கு காத்திருப்பதாக குறித்த இலங்கையர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply