சிலி நாட்டின் சரக்கு விமானம் ஒன்று 38 பயணிகளுடன் காணாமல்போயுள்ளதாக சிலி நாட்டு வான்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கெக்கூல்ஸ்-சி130 ரக விமானம் திங்கட்கிழமை மாலை ஏறத்தாள 5 மணியளவில் பொன்ரா நகரத்தில் இருந்து புறப்பட்டிருந்தது. ஆனால் அது மாலை 6 மணியளவில் காணாமல் போயுள்ளது.
இந்த விமானத்தில் 17 பணியாளர்களும் 21 பயணிகளும் பயணம் செய்திருந்தனர். அந்தாட்டிக் பிரதசேத்தில் உள்ள தமது தளத்திற்கு வழங்கல் பணிகளை மேற்கொள்ளும் நடவடிக்கையில் இந்த விமானம் ஈடுபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.