வவுனியா:உயர்தர பரீட்சையில் 2661 மாணவர்கள்: சுகாதார நடைமுறைகளுடன் பரீட்சை ஆரம்பம்

சுகாதார நடைமுறைகளுடன் பரீட்சை ஆரம்பம்

சுகாதார நடைமுறைகளுடன் பரீட்சை ஆரம்பம்: நாடளாவிய ரீதியில் உயர்தர பரீட்சை இன்று (07) ஆரம்பமாகியுள்ள நிலையில் வவுனியா மாவட்டத்திலும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி உயர்தர பரீட்சை அமைதியான முறையில் இடம்பெறுகின்றது.

இந்நிலையில் வவுனியா மாவட்டத்தில் 22 பரீட்சை நிலையங்களில் பாடசாலை பரீட்சார்த்திகள் மற்றும் தனியார் பரீட்சார்த்திகள் உள்ளடங்களாக 2661 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றுகின்றனர். இப் பரீட்சைக்காக 9 பரீட்சை இணைப்பு நிலையங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

கோவிட் தொற்று காரணமாக வவுனியா மாவட்டத்தில் பரீட்சார்த்திகள் பாதிக்கப்பட்டிருப்பின் அவர்களுக்கு பம்பைமடு பகுதியில் விசேட பரீட்சை நிலையம் ஒன்றும் பரீட்சைத் திணைக்களத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், பரீட்சைக்கு செல்லும் மாணவர்களுக்கு முகக்கவசம் கட்டாயமாக் கப்பட்டுள்ளதுடன் கைச்சுத்தம், உடல் வெப்பநிலை என்பன பார்வையிடப்படுகின்றன. பொலிசார் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.