இலங்கைக்கு 25 தொன் மருத்துவப் பொருட்கள் இந்தியாவிடமிருந்து கிடைத்துள்ளன, இதன் பெறுமதி 260 மில்லியன் ரூபாவாகும்.
கொழும்பில் உள்ள பதில் இந்திய உயர்ஸ்தானிகர் வினோத் கே ஜேக்கப்னினால் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் இந்தப் பொருட்கள் கையளிக்கப்பட்டன.
INS Gharial கப்பலில் வந்த மனிதாபிமானப் பொருட்களில் மீனவர்களின் பயன்பாட்டிற்கான மண்ணெண்ணெய் கையிருப்பும் உள்ளடங்குவதாக கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இது அடுத்த சில நாட்களில் பயனாளிகளுக்கு விநியோகிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.