புதுக்குடியிருப்பில் 26 வயதுடைய இளைஞன் கொரோனா தொற்றால் மரணம்

155 Views

26 வயதுடைய இளைஞன் கொரோனா தொற்றால் மரணம்

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட பகுதியில் நேற்றைய தினம் 26 வயதுடைய இளைஞன் கொரோனா தொற்றால் மரணம் அடைந்துள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் சுகவீனம் காரணமாக மூங்கிலாறு வைத்தியசாலையில் நேற்று (12) அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மரணமடைந்திருந்தார். மரணமடைந்தவரின் சடலத்தை இன்று (13) புதுக்குடியிருப்பு வைத்தியசாலைக்கு எடுத்து வரப்பட்டு அவரிற்கு முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

மூங்கிலாறு பகுதியை சேர்ந்த 26 வயதுடைய இளைஞனே இவ்வாறு மரணமடைந்துள்ளவராவார். இதனையடுத்து மரணமடைந்த நபரை எரியூட்டுவதற்கான நடவடிக்கைகளை சுகாதார பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த மரணத்துடன் புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட பகுதியில் இதுவரை 16 மரணங்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ilakku-Weekly-Epaper-146-September-05-2021

Leave a Reply