இந்திய மீனவர்கள் 23 பேரும் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு மாற்றம்

536 Views

மீனவர்கள் 23 பேரும் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு மாற்ற
இலங்கை கடற்படை
முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த மீனவர்கள் 23 பேரும் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு மாற்ற அனுமதித்து பருத்தித்துறை நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நிலையில் கடற்படையிரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 23 பேரும் காங்கேசன்துறை கடற்படை முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

இதனிடையே நேற்று முன் தினம் மீனவர்கள் வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த பருத்துத்துறை நீதிமன்ற நீதிபதி, மீனவர்கள் அனைவரையும் நவம்பர் மாதம் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

இந்நிலையில் கடற்படைத் தளத்தில் தங்கியுள்ள மீனவர்கள் 23 பேரையும் யாழ்ப்பாணம் சிறைக்கு மாற்றக் கோரியும் அவர்களை விசாரணைக்கு உட்படுத்த அனுமதிக்கக் கோரியும் யாழ்ப்பாணம் நீரியல்வளத்துறை அதிகாரிகள் நகர்த்தல் பத்திரம் ஒன்றைத் தாக்கல் செய்தனர்.

மனுவை விசாரித்த நீதிபதி மீனவர்கள் 23 பேரையும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கவும் அவர்களை விசாரிக்கவும் அனுமதித்து உத்தரவிட்டுள்ளார்.

இதனிடையே, குறித்த மீனவர்களை தூதரக அதிகாரிகள் சந்தித்து அவர்களுக்கு தேவையான பொருட்களை கையளிப்பதற்கும், மீனவர்கள் உறவினர்களுடன் தொலைபேசி ஊடாக உரையாடுவதற்கும் அனுமதி வழங்குமாறு இந்தியத் துணைத்தூதரகம் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி நீதிபதியிடம் கோரியிருந்தார்.

அதனைப் பரிசீலித்த நீதிபதி, தூதரக அதிகாரிகள் குறித்த விவரங்களையும், குடும்பத்தாரின் தொலைபேசி இலக்கம் மற்றும் உறவு முறை குறித்த விவரங்களையும் எதிர்வரும் முதலாம் திகதி நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டார்.

ilakku Weekly Epaper 153 october 24 2021 Ad இந்திய மீனவர்கள் 23 பேரும் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு மாற்றம்

Leave a Reply