கேரள மாநிலத்தில் படகு கவிழ்ந்ததில் 22 பேர் பலி

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் உல்லாசப் படகு கவிழ்ந்ததில் 22 பேர் பலியாகியுள்ளனர். அதே நேரம்  20 பேர் உயிருடன் மீட்கப்பட்டு   தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டம் தானூர் தாலுகாவிற்கு உட்பட்ட ஓட்டும்புறம், தூவல் தீரம் என்ற இடத்தில் சுற்றுலா பயணிகள் கடலில் உல்லாச பயணம் செய்து வருவது வாடிக்கையானது. அவ்வாறு சுற்றுலா வந்த இடத்தில் ஈரடுக்கு உல்லாசப் படகில் சுற்றுலாப் பயணிகள் சுற்றிப் பார்க்கச் சென்ற போது இந்த விபத்து நேரிட்டுள்ளது.

விபத்து நேரிட்டதும், மீட்புப் படையினருடன் உள்ளூர் மக்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.