இலங்கை அரசமைப்புச் சட்டத்தின் 21வது திருத்தம்: அமைச்சரவைக் கூட்டம் விவாதிக்கும்- அமைச்சர் விஜேதாச ராஜபக்சே

286 Views

அரசமைப்புச் சட்டத்தின் 21வது திருத்தம் தொடர்பாக இன்று நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டம் கவனம் செலுத்தும் என்று நீதித்துறை, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்த அமைச்சர் விஜேதாச ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “21ஆவது அரசியலைமைப்பு திருத்தம் தொடர்பில் அரசியல் கட்சிகள், சிவில் சமூக அமைப்புகள் உள்ளிட்டவற்றுடன் முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடல்களின் போது பல பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன.

அவை தொடர்பாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இவற்றை 21இல் உள்ளடக்குதல் மற்றும் அதனை இறுதிப்படுத்துதல் தொடர்பில் இன்று நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

திருத்தங்களை உள்ளடக்கிய 21ஐ நிறைவேற்றிக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.

Tamil News

Leave a Reply