ஜனவரி
கோவிட்-19 நோயை கட்டுப்படுத்த உருவாக்கப்பட்ட mRNA தடுப்பு மருந்து (Vaccine) தொழில்நுட்பம் தற்போது எயிட்ஸ் நோயை உருவாக்கும் எச்.ஐ.வி எனப்படும் வைரசுக்கு எதிரான தடுப்பு மருந்து உருவாக்கத்திற்கு வழிவகுத்ததுடன் அது தற்போது அமெரிக்காவில் உள்ள நோயாளிகளில் பரிசோதனை செய்யப்படுகின்றது.
கார்பன் பொருட்களான Graphite மற்றும் Nanotubes ஆகிய பொருட்களின் மேற்பரப்பில் நீர் மூலக்கூறு தொழிற்படும் விதம் வேறுபட்டு இருப்பதை பிரான்ஸ் நாட்டை சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். அதற்கான விளக்கத்தை Quantum Friction இன் மூலம் தந்துள்ளனர். இந்த கண்டுபிடிப்பு கடல்நீரை நன்னீராக்கும் தொழில்நுட்பத்திற்கான மென்சவ்வை (Membrane) வடிவமைக்க உதவும் என தெரிவிக்கப்படுகின்றது.
பெப்ரவரி
சூழல் வெப்பநிலையை அதிகரிக்கும் கார்பன்டை ஒக்சைட்டு எனப்படும் வாயுவை பயன்படுத்தி பயன்தரும் இராசாயனப் பொருட்களான அசற்றோன் மற்றும் ஐசோபுறப்பனோல் ஆகியவற்றை தயாரிக்கும் மரபணு மாற்றப்பட்ட பக்ரீரியாவை அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
அதிக சக்திகொண்ட வெடிமருந்தான 1,3,5-trinitro-2,4,6-trinitroaminobenzene வடிவமைக்கப்பட்டுள்ளது. இது தற்போதுள்ள வெடிமருந்துகளை விட பல மடங்கு சக்தி வாய்ந்தது என தெரிவிக்கப்படுகின்றது.
மார்ச்
இரைப்பை நோயை குணமாக்கும் Bismuth subsalicylate எனப்படும் மருந்தின் மூலக்கூற்று வடிவத்தை Electrone diffraction and scanning transmission electron microscopy எனப்படும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சுவீடன் நாட்டை சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். 120 வருடங்கள் மேற்கொண்ட முயற்சியின் பலன் இதுவாகும்.
ஏப்பிரல்
மாசடைந்த நீரில் இருந்து உப்புக்கள் மற்றும் கழிவுப்பொருட்களை அகற்றும் Fluorinated nanochannels எனப்படும் தொழில்நுட்பத்தை யப்பானிய விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இது தற்போதுள்ள தொழில்நுட்பத்தை விட 3 மடங்கு வினைத்திறன் மிக்கது.
மே
ஹீலியம் (He) எனப்படும் வாயுவின் அளவு வளிமண்டலத்தில் அதிகரிப்பது கடந்த 46 வருடங்களாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும் 3He எனப்படும் புதிய சமதானியும் கண்டறியப்பட்டுள்ளது. ஹீலியம் வாயு பிறந்தநாள் கொண்டாட்டங்களின் போது பறக்கும் பலூன்களை நிரப்ப பயன்படுத்தப்படுவதுண்டு.
ஈரப்பதனுள்ள வெப்பநிலையை பயன்படுத்துவதன் மூலம் Dark chocolates இனிப்பு வகைகளை தயரிக்க முடியும் என சுவிற்சலாந்தின் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இது நுண்ணங்கிகளை பயன்படுத்தி தாரிக்கப்படும் பாரம்பரிய முறையை விட அனுகூலமானது.
ஜூன்
குளோறீன் எனப்படும் வாயு நிரப்பப்பட்ட கொள்கலன் ஒன்று கப்பலில் இருந்து இறக்கும் போது வீழ்ந்து விபத்துக்குள்ளானதால் 13 பேர் கொல்லப்பட்டதுடன், 250 இற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 25 தொன் எடைகொண்ட இந்த கொள்கலன் விபத்து ஜோர்டானில் இடம்பெற்றது.
ஜூலை
மரபணு மாற்றம் செய்யப்பட்ட மண்ணில் வாழும் பக்ரீரியாவை பயன்படுத்தி வளைய மூலக்கூறுகாக மாற்றப்படும் ஐதோரோ காபர்ன்கள் என்படும் எரிபொருள் தயாரிக்கப்பட்டுள்ளது. சக்தி அடர்த்தி கொண்ட இந்த எரிபொருள் செயற்கை கோள்களை ஏவும் உந்துகணைகளுக்கான எரிபொருட்களாக பனப்படுத்தப்படவுள்ளது.
உலகில் உள்ள கொடிய நட்சுப்பொருட்களில் ஒன்றான Strychnine எனப்படும் நட்சுப்பொருளை தாவரங்கள் எவ்வாறு தயாரிக்கின்றன என்ற தொழில்நுட்பத்தை ஜேர்மனியை சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
ஆகஸ்ட்
வளிமண்டலத்தில் உள்ள நீரை பயன்படுத்தி சூழலை மாசுபடுத்தாத எரிபொருளை தயாரிக்கும் தொழில்நுட்பத்தை பிரித்தானியா மற்றும் அவுஸ்திரேலிய விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். சூரிய சக்தியில் இயங்கும் இந்த உபகரணம் வளியில் உள்ள 4 விகித ஈரப்பதனில் இருந்தும் ஐதரசன் எனப்படும் எரிபொருளை தயாரிக்கும் சக்தி கொண்டது.
செப்ரம்பர்
மிக அதிகளவில் விற்பனை செய்யப்படும் John McMurry எழுதிய சேதன இரசாயண நூல் அதன் காப்புரிமை விதிகளில் ஏற்பட்ட தவறினால் மாணவர்கள் இலவசமாக பயன்படுத்துவதற்கு ஏற்ப வெளிவந்துள்ளது.
மரபணு மாற்றம் செய்யப்பட்ட ஊதா நிற தக்காளி பழ உற்பத்திக்கு அமெரிக்கா அனுமதி வழங்கியுள்ளது. Anthocyanins எனப்படும் இரசாயணப்பொருளை அதிகம் கொண்ட இந்த தாக்காளி செடியை பிரித்தானியாவின் Norfolk plant sciences என்ற நிறுவனம் வடிவமைத்திருந்தது
ஒக்டோபர்
இந்தியாவின் Maiden Pharmaceuticals எனப்படும் மருந்து உற்பத்தி நிறுவனம் தயாரித்த இருமல் மருந்தினை உட்கொண்ட 66 பேர் மேற்கு ஆபிரிக்க நாடான கம்பியாவில் உயிரிழந்துள்ளனர். இதனை தொடர்ந்து இந்த மருந்தினை உலக சுகாதார நிறுவனம் தடை செய்துள்ளது. இந்த மருந்தில் Ethylene glycol and diethylene glycol போன்ற இராசாயணப் பொருட்கள் அதிகம் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.
பிரேசிலின் விஞ்ஞானிகள் புதிய அரச தலைவர் லூலா டி சில்வாவின் வெற்றியை வரவேற்றுள்ளனர். முன்னைய அதிபருடன் ஒப்பிடும் போது லூலா ஆய்வுகளுக்கு அதிக நிதியை ஒதுக்கும் திட்டத்தை செயற்படுத்தியிருந்ததுடன், விஞ்ஞானிகளின் சுதந்திரத்திலும் தலையிடுவதில்லை.
நவம்பர்
ஆய்வுகூடத்தில் தயாரிக்கப்பட்ட கோழி இறைச்சிக்கு அமெரிக்காவின் FDA எனப்படும் உணவுக்கட்டுப்பாட்டு நிறுவனம் அனுமதி வழங்கியுள்ளது. கலிபோர்னியாவை தளமாகக் கொண்ட Upside foods என்ற நிறுவனம் இந்த இறைச்சியை தயாரித்துள்ளது. இது சாதாரண கோழி இறைச்சியை போல பாதுகாப்பானது என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஊதிய உயர்வு கோரி அமெரிக்காவின் கலிபோர்னியா மற்றும் Lawrence Berkeley National ஆய்வு கூடங்களில் பணியாற்றும் 50,000 விஞ்ஞானிகள் பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டிருந்தனர். அதேசமயம், பிரித்தானியாவின் 150 பல்கலைக்கழகங்களை சேர்ந்த 70,000 விஞ்ஞானிகளும் பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டிருந்தனர்.
டிசம்பர்
Coca தாவரம் எவ்வாறு கொக்கெயின் (Cocaine) எனப்படும் போதைப்பொருளை தயாரிக்கின்றது என்பது தொடர்பான தொழில்நுட்பத்தை இரண்டு ஆய்வுக் குழுக்கள் கண்டறிந்துள்ளன.