இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா அவர்களிடம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் முன்வைத்த பரிந்துரைக்கு அமைவாக, இ.தொ.காவைச் சேர்ந்த 20 உள்ளூராட்சி மன்ற உபத்தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் நேற்று (18) இந்தியா பயணமாகியுள்ளனர்.
இந்திய அரசாங்கத்தின் ஏற்பாட்டில், இம்மாதம் 19ஆம் திகதியிலிருந்து 29ஆம் திகதி வரை 11 நாட்கள் இந்தியாவின் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நடைபெறவுள்ள, உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களை வலுவூட்டும் விசேட செயலமர்வில் பங்கேற்பதற்காக இக்குழு இந்தியா செல்கிறது.
இச் செயலமர்வில் இலங்கையிலிருந்து நுவரெலியா, பதுளை, மாத்தளை மற்றும் கண்டி மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தி இ.தொ.காவைச் சேர்ந்த மொத்தம் 20 உள்ளூராட்சி மன்ற உபத்தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துக்கொள்ளவுள்ளனர்.
இந்த செயலமர்வு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் அவர்களின் பரிந்துரையின் கீழ், இந்திய அரசாங்கம் முன்னெடுக்கும் முதலாவது வேலைத்திட்டமாக அமைந்துள்ளது.



