திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட ஐந்து தமிழ் மாணவர்களின் 17 ஆம் ஆண்டு நினைவேந்தல்

79 Views

இராணுவத்தால் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட மாணவர்கள் ! – eelamview

திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட ஐந்து தமிழ் மாணவர்களின் 17 ஆம் ஆண்டு நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

2006 ஆம் ஆண்டு ஜன­வரி 2 ஆம் திகதி திரு­கோ­ண­மலை கடற்­க­ரையில் அமைந்­துள்ள காந்தி சிலை அருகில் வைத்து ஐந்து மாண­வர்கள் சிறிலங்காவின் ஆயுத படையினரால் சுட்டுக் கொல்­லப்­பட்­டனர். மனோ­கரன் ரஜிகர், யோக­ராஜா ஹேமச்­சந்­திரா, லோஹி­த­ராஜா ரொஹான், தங்­கத்­துரை சிவா­னந்தா, சண்­மு­க­ராஜா கஜேந்­திரன் ஆகிய ஐந்து மாண­வர்­க­ளுமே  இவ்வாறு சுட்டுக் கொல்­லப்­பட்­டவர்களாவர்.

இறந்­த­வர்கள் பல்­க­லைக்­க­ழக அனு­ம­திக்­காக காத்­தி­ருந்த மாண­வர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இன்று (திங்கட்கிழமை) வல்வெட்டி துறையில் அமைந்துள்ள எம்.கே. சிவாஜிலிங்கத்தின் அலுவலகத்தில் குறித்த மாணவர்களுக்கு நினைவு அஞ்சலி நிகழ்வு இடம் பெற்றுள்ளது.

இதன் போது படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் உருவப்படத்திற்கு அவர் சுடர்ஏற்றி அஞ்சலி செலுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply