கொழும்பு துறைமுகத்தை நவீனமயப்படுத்த 17 மில்லியன் டொலர் முதலீடு – அமெரிக்கா அறிவிப்பு

கடல்சார் வர்த்தகத்தில் செயல்திறனை மேம்படுத்தி, தாமதங்களையும் செலவு களையும் குறைக்கும் நோக்கில், கொழும்பு துறைமுகத்தின் செயல்பாடுகளை டிஜிட் டல் மயமாக்குவதற்காக 17 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டை அமெரிக்கா இன்று (16) அறிவித்துள்ளது.
இலங்கை துறைமுக அதிகார சபையுடன் (SLPA) இணைந்து நடைமுறைப்படுத்தப்படவுள்ள இத்திட்டத்தின் கீழ், துறைமுகச் செயல்பாடுகளைச் சீரமைத்து, உலகளாவிய வர்த்தகத்தில் இலங்கையின் பங்கை வலுப்படுத்தும் வகையில் புதிய டிஜிட்டல் கட்டமைப்புகள் அறிமுகப் படுத் தப்படவுள்ளன.
அமெரிக்காவின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்படும் இத்திட்டம், ஒன்றோ டொன்று இணைக்கப்பட்ட இரண்டு அமைப்புகளான கடல்சார் ஒற்றைச் சாளர அமைப்பு (Maritime Single Window) மற்றும் துறைமுகச் சமூக அமைப்பு (Port Community System) ஆகியவற்றை உருவாக்குவதற்கு ஆதரவளிக்கும்.
அமெரிக்காவின் அறிவிப்பின்படி, இம்முதலீடு அமெரிக்க வர்த்தக நிறுவனங் களுக்கு ஆதரவளிப்பதுடன், அந்நாட்டின் விநியோகச் சங்கிலிகளை வலுப்படுத்தவும், அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான வர்த்தக வாய்ப்புகளை விரிவுபடுத்தவும் உதவும் என கூறப்படுகின் றது.