17ஆம் ஆண்டு நினைவில் அரசியல் துறை பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் பற்றிய நினைவுப்பகிர்வு-பா.அரியநேத்திரன் 

தமிழுலகமே ஆழமாக நேசித்த ஒரு அரசியல் தலைவன் – சு.ப.தமிழ்செல்வன் | Uyirpu

விடுதலைப்புலிகளுடைய அரசியல் பொறுப் பாளராக செயல்பட்ட சு.ப. தமிழ்செல்வன் கடந்த 2007,நவம்பர், 02, ல் வான்வெளித்தாக்குதலில் உயிரிழந்தார். இன்று 2024, நவம்பர்,02,ல் அவர் உயிரிழந்து 17 ஆண்டுகள் கடந்து விட்டன.

சு. ப. தமிழ்ச்செல்வன் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளராக இருந்தவர். தினேஸ் என்ற இயக்கப் பெயரைக் கொண்டிருந்த இவர் புலிகள் இயக்கத்தில் கீழ் மட்டங்களில் இருந்து வளர்ந்து இறப்பின் போது புலிகளின் தலைமையின் உள்வட்டத்தின் ஒருவ ராக செயற்பட்டார்.

1987 இல் யாழ். தென்மராட்சி கோட்டப் பொறுப்பாளராகவும் 1991 ஆம் ஆண்டு முதல் யாழ்ப்பாண மாவட்டசிறப்புத் தளபதியாகவும் செயற்பட்டார். 1993இல் கிளிநொச்சி மாவட்டம் பூநகரியில் இலங்கை இராணுவத் தளம் மீதமான தவளைப் பாய்ச்சல்என்கிற விடுதலைப்புலிகளின் இராணுவ நடவடிக்கையில் போரில் காலில் காயமடைந்ததைத் தொடர்ந்து அரசியற் துறைப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்; 2007 நவம் பர் இலங்கை வான்படையின் தாக்குதலில் கொல்லப்படும் வரை அப்பதவியில் இருந்தார். பல ஆண்டுகளாக விடுதலைப் புலிகளின் பகிரங்க முகமாக செயற்பட்டு இராணுவ இயக்க மாக இருந்த புலிகள் இயக்கத்தில் அரசியல் மாற்றங் களையும் ஏற்படுத்தி வந்தார்.

புலிகளின் சமாதானப் பேச்சுவார்த்தைக ளில் பங்கேற்று வந்த இவர் அன்ரன் பாலசிங்கத்தின் மறைவுக்குப் பின்னர் பேச்சுவார்த்தைக் குழு வின் தலைவராகவும் செயற்பட்டு வந்தார். 23 ஆண்டுக் கால இயக்க வாழ்வைக் கொண்ட இவரின் இறப்பு புலிகளால் ஈடு செய்யப்பட முடி யாத ஒரு இழப்பாக அப்போது பல அரசியல் ஆய்வாளர்களால் கூறப்பட்டிருந்தது.

தமிழ்ச்செல்வன் யாழ்ப்பாண மாவட்டத்தின் சாவகச்சேரியில் பிறந்தார். இவர் தனது கல்வியை சாவகச்சேரி இந்துக் கல்லூரி யில்பயின்றார். 1984 இல் விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து இந்தியாவில் ஆயு தப் பயிற்சி பெற்றார்.

1993 இலிருந்து இறக்கும் வரை தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளராகச் செயற்பட்டார். நோர்வே அனுசரணையில் இலங்கை அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் பங்குபற்றினார். அன்ரன் பாலசிங்கத்தின் மரணத்தைத் தொடர்ந்து விடுதலைப்புலிகள் அமைப்பின் அதியுயர் அரசி யற் தலைவரானார்.

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தில் பிரிகேடியர் தரத்துக்கு அவர் நிலையுயர்த்தப் பட்டுள்ளார்.

இவர் விடுதலைப்புலிகளின் அமைப்பில் 1986, காலப்பகுதியில் இணைந்து பல்வேறு நிலை களால் பற்றுறுதியுடன் களப்பணிகளில் ஈடுபட்ட வரலாறுகளை நோக்கலாம்.

தமிழகத்தில் விடுதலைப் புலிகளின் 4 ஆவது பயிற்சி முகாமில் அவர் பயிற்சியைப்பெற்று தமிழகத்தில் வே. பிரபாகரனின் தனிப்பட்ட இணைப்பாளராக பணியாற்றினார்.

1986 இல் விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் தமிழகத்திலிருந்து ஈழம் வரு வதற்கு முன் ஈழத்துக்கு வந்து களநிலைமைகள் பற்றிய தகவல்களை திரட்டி மீளவும் தமிழகம் சென்று திரும்பவும் வே. பிரபாகரனுடன் தாயகம் திரும்பினார். அப்போது அவரின் விடுதலைப் புலிகள் அமைப்பின் பெயர் தினேஸ் என்பதாகும்.

தமிழகத்திலிருந்து திரும்பிய அவர், 1987 மேமாதம் யாழ். தென்மராட்சி கோட்டப் பொறுப் பாளராக நியமிக்கப்பட்டார்.

1991 வரை அப்பதவியில் அவர் நீடித்தார். இந்தியப் படைகளுக்கு எதிரான போரில் தென்மராட்சியில் நின்று தாக்குதல் நடவடிக்கை களை அவர் மேற்கொண்டார்.

1991 இல் யாழ் மாவட்ட சிறப்புத் தளபதி யாக செயற்பட்டார்.

1993 இல் தமிழீழ அரசியல்துறைப் பொறுப் பாளர் என்ற நிலையை அவர் பெற்று கடைசிவரை அந்தப் பொறுப்பில் இருந்தார்.

1994-1995 இல் சந்திரிகா அரசுடனான அமைதிப் பேச்சுவார்த்தையில் விடுதலைப் புலிகளின் அணிக்கு தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கி னார்.

2002 ஆம் ஆண்டு நோர்வே அனுசர ணையிலான பேச்சுவார்த்தைக்குழுவில் அன்ரன் பாலசிங்கத்துடன் இருந்து பின்னர் பேச்சுவார்த் தைக் குழுவின் தலைமைப்பணியை செய்து வந்தார். அவர் பல தாக்குதல்களில் நேரடியாக பங்கு கொண்ட வரலாறுகளும் அவரிடம் காணலாம்

1987 – 1989 வரை யாழ் தென்மராட்சி பகுதியில் இந்திய இராணுவத்துக்கு எதிரான நேரடித் தாக்குதல்.

1991 இல் ஆகாய கடல்வெளி நடவடிக்கை (ஆனையிறவு இலங்கை இராணுவ முகாம் வலிந்த தாக்குதல்) இந்த நடவடிக்கையின் போது நெஞ்சில் காயமடைந்தார்.

1992 இல் இலங்கைப் படையினரின் “பல வேகய – 02” எதிர்ச்சமரிலும்.தச்சன்காடு இலங்கைப் படைமுகாம் மீதான தாக்குதல்.காரைநகரில் இலங்கைப் படையினர் மீதான தாக்குதல்.

1991 இல் மன்னார் சிலாபத்துறை இலங்கைப் படைத்தளம் மீதான தாக்குதலுக்கு தளபதியாக செயல்பட்டார்.

பூநகரி சிறிலங்கா படைத்தளம் மீதான தவளைப் பாய்ச்சல் நடவடிக்கை, 1993 நடவடிக்கையில் பங்காற்றிய அவர் தன்னுடைய காலில் காயமடைந்தார்.

ஓயாத அலைகள் மூன்று நடவடிக்கையில் தென்மராட்சி தனங்கிளப்பு சிறிலங்கா படைத் தளம் அழிப்பு உள்ளிட்ட தென் மராட்சிப்பகுதி மீட்புத்தாக்குதலில் கட்டளைத் தளபதியாக பங்காற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

2001ல் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு உருவாக்கத் திலும் அரசியல் துறை பொறுப்பாளராக இருந்த இவருடைய பங்களிப்பை மறக்கமுடியாது.

2004-22 தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பாராளு மன்ற உறுப்பினர்கள் தெரிவாகி இரா சம்பந்தன் தலைமையில் கிளிநொச்சியில் நடைபெற்ற பல சந்திப்புக்களிலும் தமிழ் செல்வனுடைய ஆலோசனைகள் இருந்து.

இவ்வாறானா ஆளுமையானவராக பணி யாற்றி இவர் விமானக்குண்டு வீச்சால் உயிர்நீத்து இன்று 17, வது ஆண்டு கடந்துள்ளது.