இந்திய குடியுரிமையை துறந்த 16 லட்சம் பேர்: மத்திய அரசு தகவல்

கடந்த 11 ஆண்டுகளில் மட்டும் 16 இலட்சம் பேர் இந்திய குடியுரிமையை துறந்து வெளிநாடுகளில் குடியேறியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் வி.முரளீதரன் மக்களவையில் கூறியது. நடப்பாண்டில் அக்டோபர் 31 வரையிலான நிலவரப்படி 1,83,741 பேர் இந்திய குடியுரிமையை துறந்துள்ளனர். இந்த எண்ணிக்கை 2015-ல் 1,31,489 ஆகவும், 2017-ல் 1,33,049-ஆகவும் 2018-ல் 1,34,561-ஆகவும், 2019-ல் 1,44,017-ஆகவும்இருந்தன. கடந்த 2021-ல் மட்டும்1,63,370 பேர் இந்திய குடியுரிமையை விட்டு விலகியுள்ளனர்.

அதன்அடிப்படையில், கடந்த2011-ம் ஆண்டிலிருந்து இதுவரையில் மொத்தம் 16,21,561 பேர் இந்திய குடியுரிமையை விலக்கிக் கொண்டு வெளிநாடுகளில் குடியேறியுள்ளனர்.

வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் தவிர்த்த இதர வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு 2015-ல் 93 பேருக்கும், 2016-ல் 153 பேருக்கும், 2017-ல்175 பேருக்கும், 2018-ல் 129 பேருக்கும், 2019-ல் 113 பேருக்கும், 2020- ல் 27 பேருக்கும், 2021- ல் 42 பேருக்கும், 2022-ல் 60 பேருக்கும் இந்திய குடியுரிமை வழங்கப்பட்டது. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.