அமெரிக்காவில் யூதர்கள் மீது கத்திக் குத்து – ஐவர் காயம்

நியூயார்க்கில் ஒரு யூத மத குருவின் வீட்டில் நடந்த தாக்குதலில், குறைந்தது 5 பேர் கத்திக்குத்தில் தாக்கப்பட்டுள்ளதாக, நியூயார்க் காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.

வடக்கு நியூயார்க்கில் உள்ள மோன்சியில் ஒரு மத கொண்டாட்டத்தின்போது, தாக்குதல்தாரிகள் உள்ளே புகுந்து அங்கிருந்தவர்களை தாக்கியதாக யூத பொது விவகாரங்களுக்கான சபை (OJPAC) கூறுகிறது.

சந்தேக நபர் அங்கிருந்து தப்பியதாகவும், ஆனால் காவல்துறையினர் அவரை கண்டுபிடித்து கைது செய்துள்ளனர் என்றும் தெரிவித்தனர். தாக்குதலுக்கான காரணம் குறித்த விவரங்கள் எதுவும் இதுவரை தெரியவில்லை.

நகரத்தில், யூத எதிர்ப்பு அச்சுறுத்தல்கள் தொடர்ந்து நிலவுவதால், யூத மக்கள் வாழும் பல பகுதிகளில், காவல் துறையினர் ரோந்து பணிகளை மேற்கொண்டு வருவதாக நியூயார்க் நகர காவல்துறையினர் கூறிய பிறகு அண்மையில் இந்த தாக்குதல் நடந்துள்ளது.

பாரம்பரிய யூதர்கள் அதிகம் வசிக்கும் மோன்சியில் ஒரு மத குருவின் இல்லத்தில், ஹனுக்கா கொண்டாட்டத்தின்போது முக மூடி அணிந்த நபர் தாக்குதல் நடத்தினார்.தாக்குதல் நடத்தியவர் பின்னர் கைதுசெய்யப்பட்டள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன 800 அமெரிக்காவில் யூதர்கள் மீது கத்திக் குத்து - ஐவர் காயம்