நாஸ்கா கோடுகள் என அழைக்கப்படும் 140இற்கும் மேற்பட்ட புதிய நிலவடிவமைப்புகளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். நீண்ட காலத்திற்கு முன்பான, மர்மமான, பண்டைய மாபெரும் உருவங்களின் தொகுப்பான இவை, தெற்கு பெருவின் பாலைவன நிலப்பரப்பில் பொறிக்கப்பட்டுள்ளன.
விலங்குகள், மனிதர்கள் மற்றும் இதரபொருட்களின் இந்த பெரிய, பரந்த வடிவமைப்புகளில் சில 2,500 ஆண்டுகளுக்கு முந்தையவை மற்றும் வை மிகப் பெரியவை. எவ்வளவு பெரியவை என்றால், அவற்றில் பலவற்றை வானிலிருந்து மட்டுமே அடையாளம் காணமுடியும்.
இப்போது ஜப்பானின் யமகடா பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் 2004ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்ட ஒரு நீண்டகால ஆராய்ச்சியின் விளைவாக, இதுவரை அறியப்படாத 143 நாஸ்கா ஜயோகிளிப்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் செதுக்கப்பட்ட உருவத்துடன் கூடிய ஒன்று, மனிதர்கள் மூலம் கண்டறியப்படுவது தவிர்த்து செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் கண்டுபிடிக்கப்பட்டது.
மொத்தத்தில் புதிதாக அடையாளம் காணப்பட்ட ஜியோகிளிப்கள் குறைந்தது கி.மு 100 முதல் 300 வரை உருவாக்கப்பட்டதாகக் கருதப்படுகின்றது. பண்டைய நாஸ்கா கலாச்சாரத்தில் வரையப்பட்ட இந்த பெரிய வடிவங்களின் நோக்கம் விவாதிக்கப்படுகின்ற அதேவேளையில், அவை எவ்வாறு கட்டப்பட்டன என்பது தற்போது தெரியவந்துள்ளது.
“இந்த வடிவமைப்புகள் அனைத்தும் அவை சார்ந்துள்ள நிலத்தில் உள்ள கருங்கற்களை அகற்றுவதன் மூலம் கீழே உள்ள வெள்ளை நிலத்தை வெளிப்படுத்துவதன் மூலம் உருவாக்கப்பட்டுள்ளன“ என்று ஆராய்ச்சிக்குழு விளக்குகின்றது.
முந்தைய கருதுகோள்கள் நாஸ்கா சமூகம் மாபெரும் ஜியோகிளிப்களை வடிவமைத்துள்ளதாகவும், அவை சில நூற்றுக் கணக்கான மீற்றர் நீளமுள்ளதாகவும், வானத்தில் உள்ள தெய்வங்களால் காணப்பட வேண்டும் அல்லது அவை வானியல் நோக்கங்களுக்காக உதவுவதற்காக உருவாக்கப்பட்டிருக்கலாம் என குறிப்பிடுகின்றன.
மானுடவியலாளரும் தொல்பொருள் ஆராய்ச்சியாளருமான மசாடோ சாகாய் தலைமையிலான புதிய ஆராய்ச்சியில், அக்குழு நாஸ்கா பிராந்தியத்தின் உயர் தெளிவுத்திறன் கொண்ட செயற்கைக்கோள் படங்களை ஆய்வு செய்ததுடன், களப்பணிகளையும் மேற்கொண்டு இரண்டு முக்கிய வகை ஜியோகிளிப்களை அடையாளம் கண்டது.
பி பிரிவு என அழைக்கப்படும் மிகப் பழைமையான செதுக்கல்கள் (கி.மு.100முதல் கி.பி.100 வரை) 50 மீற்றருக்கு (165அடி) குறைவான அளவை கொண்டுள்ளன. பிரிவு ஏ எனப்படும் சற்றே பெரிய வகை வடிவங்கள் (கி.மு100 முதல் கி.பி.300 வரை) 50 மீற்றர் முதல் இக்குழுவால் க்டுபிடிக்கப்பட்ட மிகப் பெரிய ஜியோகிளிப்பான 100 மீற்றர் (330 அடி) அளவுடையவை.
பெரிய ஏ வகை ஜியோகிளிப்கள் பெரும்பாலும் விலங்குகளைப் போல வடிவமைக்கப்பட்டு சடங்கு நடைபெறும் இடங்களாகவும், அங்கு மக்கள் பல்வேறு மட்பாண்ட பாத்திரங்களை அழிப்பதில் ஈடுபட்டனர் எனவும் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
இதற்கு நேர் மாறாக, சிறிய வகை பி வடிவங்கள் பாதைகளில் அமைந்திருந்தன. மேலும் பயணிகளை நோக்கு நிலைப்படுத்துவதற்கான வழிப்பாதைகளாக செயற்பட்டிருக்கலாம். ஒருவேளை ஒரு பெரிய வகை ஏ சடங்கு இடத்தை நோக்கி மக்களுக்கு வழிகாடட பயன்பட்டிருக்கலாம் என்றனர் ஆராய்ச்சியாளர்கள்.