13 ஆம் திருத்தத்தினை தீர்வாக ஏற்றுக் கொள்ள முடியாது – ஜோதிலிங்கம்

13 ஆம் திருத்தத்தினை தீர்வாக ஏற்றுக் கொள்ள முடியாது என அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியுமான ஜோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில்,

“13ஆம் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான பேச்சுக்கள் தற்போது இடம் பெற்று வருகின்றன. 13-ஆம் திருத்தச் சட்டம் என்பது ஓர் அரசியல் தீர்வு அல்ல.

அரசியல் தீர்வை பெறாமல் அவசியத்தை மேற்கொள்ள முடியாது என்பதே தமிழ் மக்களின் தற்போதைய நிலைப்பாடு. தற்போது உள்ள அரசியல் கட்சிகளைச் சேர்ந்தோர் தம்மால் இயலாத நிலையிலையே 13 ஆம் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற நிலைக்கு வந்துள்ளனர். ஆனால் 13 ஆம் திகதி சட்டம் என்பது இந்தியாவும் இலங்கையும் எடுத்துக்கொண்ட தீர்வே தவிர அது தமிழ் மக்களுக்கான தீர்வு அல்ல. எனவே இது ஒருபோதும் தமிழ் மக்களுக்கான தீர்வாக அமையாது” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளது.

அத்துடன் ” தேர்தல் நடத்துவதற்கு பணம் இல்லாத அரசாங்கம் எவ்வாறு குடிசன மதிப்பீட்டினை மேற்கொள்ளும் இதற்கு அதிகளவிலான பணம் செலவிடப்படும். எனவே இவ்வாறான வேலைத் திட்டங்கள் இப்போது மக்களுக்கு தேவைதானா? என்ற கேள்வி எம்மிடையே எழுகின்றது” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.