யாழ்ப்பாணம் – நெடுந்தீவுக்கு அருகில், எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் தமிழிக மீனவர்கள் 12 பேர் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதன்போது, இரண்டு படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
தமிழகத்தின் புதுக்கோட்டை – ஜெகதாபட்டினத்தில் இருந்து மீன்பிடிக்காக கடலுக்கு சென்ற மீனவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் யாழ்பாணம் மயிலட்டி துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டு நீரியல் வளத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக கடற்படைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.