இலங்கையில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இதுவரை 23 மாவட்டங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அனர்த்தங்களில் சிக்கி இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
மழை, வெள்ளம் போன்ற அனர்த்தங்களால் 99 ஆயிரத்து876 குடும்பங்களைச் சேர்ந்த 3 இலட்சத்து 35 ஆயிரத்து 155 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.
சீரற்ற வானிலையால் ஏற்பட்ட அனர்த்தத்தில் 17 பேர் காயமடைந்துள்ளதுடன் 2 பேர் காணாமல் பேயுள்ளனர்.
இந்த அனர்த்தத்தில் 95 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன் 1708 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட 89,007 பேர் உறவினர்களது வீடுகள் மற்றும் பாதுகாப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்னர்.
இதேவேளை, அதிகூடிய மழைவீழ்ச்சி மாத்தளை (எல்கடுவ) – 132.75 மில்லிமீற்றராக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.