தமிழ்த் தேசப் புரட்சி இயக்கத்தின் சார்பில் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வானது, இன்று திங்கட்கிழமை(27) கோயம்புத்தூர் நகரில் நடைபெற்றது.
தமிழ்த் தேசப் புரட்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் பா.தமிழரசன், ஈகைச்சுடரை ஏற்றி வைத்து, வீரவணக்கம் நிகழ்வை தொடங்கி வைத்தார்.
அமைப்புக்குழு உறுப்பினர் தோழர் சு.மாரியப்பன் வீரவணக்க முழக்கங்களை எழுப்பினார்.
செய்தித் தொடர்புச் செயலாளர் தோழர் பா.சங்கரவடிவேல், அமைப்புக்குழு உறுப்பினர் தோழர் ம.சரவணன் ஆகியோர் வீரவணக்க உரையாற்றினர்.
நிறைவாக வீரவணக்க உரையாற்றிய ஒருங்கிணைப்பாளர் தோழர் பா.தமிழரசன், தமிழர் இனத்தின் அனைத்துச் சிக்கலுக்குமான தீர்வானது, தமிழ்நாடு, தமிழீழம் ஆகிய இரு தேசங்களும் விடுதலை பெறுவதில்தான் இருக்கிறது என்று உரையாற்றினார்.
மாவீரர் நாள் நிகழ்வை இயக்கத்தின் பயிற்சி உறுப்பினர் மாணவர் பா.அன்புச்செல்வன் தொகுத்து வழங்கினார்.
இந்நிகழ்வில், இயக்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள் தோழர் பிறை.சுரேசு, தோழர் சி.இம்மானுவேல், அமைப்புக்குழு உறுப்பினர்கள் தோழர் சு.நாராயணகுமார், தோழர் பா.கௌதம், இயக்க உறுப்பினர் தோழர் க.குமார், இயக்க ஆதரவாளர்கள் திருமதி பா.விசயலட்சுமி, திருமதி சு.ராமலட்சுமி, மாணவர்கள் ச.மதிவதனி, ச.மின்விழி ஆகியோர் பங்கேற்று, தமிழீழத் தாயகப் போருக்கு தங்கள் இன்னுயிரை கொடையாக அளித்த மாவீரர்களுக்கும், மக்களுக்கும் வீரவணக்கத்தை செலுத்தினர்.