தாய்நாட்டுக்கு திரும்பிய 1,094 ஆப்கானிய அகதிகள்

தாய்நாட்டுக்கு திரும்பிய ஆப்கானிய அகதிகள்

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட வன்முறை சூழல் காரணமாக அந்நாட்டிலிருந்து வெளியேறி ஈரான், பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் தஞ்சமடைந்திருந்ர 1,094 ஆப்கானிஸ்தானுக்கு திரும்பியிருக்கின்றனர்.

இதில் 854 ஆப்கானியர்கள் ஈரானிலிருந்தும் 240 அகதிகள் பாகிஸ்தானிலிருந்தும் தாய்நாடான ஆப்கானிஸ்தானுக்கு திரும்பியிருக்கின்றனர்.

ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய கடந்த ஆகஸ்ட் 2021 முதல் இதுவரை 653,000 ஆப்கானிய அகதிகள் அண்டை நாடுகளிலிருந்து ஆப்கானுக்கு திரும்பியுள்ளனர் அல்லது நாடுகடத்தப்பட்டுள்ளனர்.

Tamil News