கட்டார் ஊடாக அமெரிக்கா மேற்கொண்டுவரும் மறைமுகமாக பேச்சுக்களை தொடர்ந்து திங்கட்கிழமை (23) ஆம் நாள் ஹமாஸ் அமைப்பினர் மேலும் இரு கைதிகளை விடுவித்துள்ளனர்.
இதனிடையே, தரைத்தாக்குதல் இஸ்ரேலுக்கு அனுகூலமாக இருக்காது என அமெரிக்காவின் பாதுகாப்புச் செயலாளர் லொயிட் ஒஸ்ரின் தெரிவித்துள்ளார். தரைத்தாக்குதல் ஆரம்பித்தால் அது 3 மாதங்கள் வரை நீடிக்கலாம். எல்லோருக்கும் ஒன்று தெரியனும், நகர்ப்புறச்சட்டை மிகவும் கடினமானது. அது மிகவும் காலம் எடுக்கும். ஹமாஸின் நிலத்திற்கு கீழ் உள்ள பதுங்கு குளிகள் மிகவும் ஆபத்தானவை.
எனவே திட்டமிடலுக்கு அதிக காலம் எடுக்கும் அது இஸ்ரேலுக்கான பொறியாகவும் இருக்கலாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, இஸ்ரேல் ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லாக்களுடன் வெற்றிகாரமான போரை முன்னெடுக்க முடியாது என அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான சி.ஜ.ஏயும் வெள்ளைமாழிகையும் நம்புவதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் இஸ்ரேலின் போர் அமைச்சரவையுடன், அமெரிக்க அதிபர், பிரான்ஸ் அதிபர், கனேடிய பிரதமர், ஜேர்மன் அதிபர், இத்தாலிய பிரதமர் மற்றும் பிரித்தானியா பிரதமர் ஆகியோர் காணொளி மாநாடு ஒன்றை திங்கட்கிழமை நடத்தியுள்ளனர்.
அதேசமயம், இஸ்ரேல் அரசு இஸ்ரேலிய பொதுமக்களுக்கு தாக்குதல் ஆயுதங்களை இன்று பெருமளவில் விநியோகம் செய்துள்ளது. பலஸ்தீன மக்களை படுகொலைசெய்யும் முகமாக இந்த ஆயுதங்கள் வழங்கப்படுவதாக பலஸ்தீன தகவல்கள் தெரிவித்துள்ளன.