இலங்கைக்கான கடன் மறுசீரமைப்பு விரைவில் நிறைவடையக்கூடும்-அமெரிக்கா

இலங்கைக்கான கடன் மறுசீரமைப்பு விரைவில் நிறைவடையக்கூடும் என நம்பவுவதாக அமெரிக்க திறைசேரி செயலாளர் ஜெனட் யெலன் தெரிவித்துள்ளார்.

இதன்படி, சர்வதேச நாணய நிதியத்தின் கடன் திட்டத்துடன் தொடர்புடைய மதிப்பாய்வுகளை சரியான முறையில் அவர்களுக்கு செய்ய முடியும் எனவும் அவர் கூறினார்.

இந்தியாவில் ஆரம்பமாகும் ஜி 20 உச்சி மாநாட்டிற்கு முன்னதாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

கடந்த வாரம் பீய்ஜிங்கிற்கான  தனது பயணம் அமெரிக்க-சீனா உறவை ‘நிச்சயமான நிலைக்கு’ கொண்டு வர உதவியது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த இரண்டு நாடுகளிடமும் உலகின் இரண்டு பெரிய பொருளாதாரங்கள் இருக்கின்றன. இந்தநிலையில பரஸ்பர அக்கறை கொண்ட பகுதிகளில் ஒத்துழைக்க கடமையிருப்பதாகவும் அமெரிக்க திறைசேரி செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், ஏழ்மையான நாடுகளுக்கான கடன் மறுசீரமைப்பு உள்ளிட்ட பரஸ்பர ஆர்வமுள்ள பகுதிகளில் சீனாவுடன் இணைந்து பணியாற்ற அமெரிக்கா ‘ஆவலுடன்’ இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.